/* */

காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தையை இடம் மாற்ற வியாபாரிகள் எதிர்ப்பு

காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தை இடமாற்றம் செய்ய வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து மார்க்கெட்டை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தையை இடம் மாற்ற வியாபாரிகள் எதிர்ப்பு
X

காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தை

காஞ்சிபுரம் தேரடி பகுதியில் அமைந்துள்ளது ராஜாஜி காய்கறி சந்தை. இங்கு காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள் அதிகாலை முதல் வரத்தொடங்கி கோயம்பேடு காய்கறி சந்தை மற்றும் பல மாவட்டத்தை சேர்ந்த காய்கறிகள் இங்கு மொத்தமாகவும் சில்லரையாகவும் விற்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் இங்கு கூடுவதால் நோய் தொற்று பரவல் அதிகரிக்கும் என பெருநகராட்சி வியாபாரிகளிடம் கூறி காய்கறி சந்தையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி வந்தனர்.

இக்கருத்தை வியாபாரிகள் ஏற்க மறுத்து ராஜாஜி காய்கறி சந்தையை மூடி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். கடந்த காலங்களில் நகரில் வெளிப்புறம் காய்கறி சந்தை அமைக்கப்பட்டதால் பெருமளவில் வியாபாரம் குறைந்து தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வந்த நிலையில் மீண்டும் இதுபோன்ற நிலையை உருவாக்க அனுமதிக்க மாட்டோம் என வியாபாரிகள் கூறுகின்றனர்.


Updated On: 17 May 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?