/* */

காஞ்சிபுரம் மாநகாரட்சி கவுன்சிலர்களுக்கு எழிலரசன் எம்எல்ஏ முக்கிய வேண்டுகோள்…

மக்கள் பிரச்சினையை பக்குவமாக கையாள வேண்டும் என காஞ்சிபுரம் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாநகாரட்சி கவுன்சிலர்களுக்கு எழிலரசன் எம்எல்ஏ முக்கிய வேண்டுகோள்…
X

காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் பேசினார்.

வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 1 ஆம் தேதி முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கடந்த 14 தினங்களில் காஞ்சிபுரம் பகுதியில் 304 மில்லி மீட்டரும், ஸ்ரீபெரும்புதூரில் 308 மில்லி மீட்டர், உத்திரமேரூர் 433 மில்லி மீட்டர், வாலாஜாபாத்தில் 204 மில்லி மீட்டர், செம்பரம்பாக்கம் பகுதியில் 380 மில்லி மீட்டரும், குன்றத்தூர் பகுதியில் 380 மில்லி மீட்டர் என மொத்தம் 2112 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாநகாரட்சி பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த மாமன்ற உறுப்பினர்களின் அவசரக் கூட்டம், மாநகராட்சி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தின்போது, கடந்த 10 தினங்களாக பெய்து வந்த கனமழையின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் இனி வருங்காலங்களில் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் குறித்து 51 வார்டு உறுப்பினர்களும் தங்களை கருத்துக்களை தெரிவிக்கலாம் என மேயர் மகாலட்சுமி யுவராஜ் அறிவுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் கலந்து கொண்டு, மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் குறித்து கவனமுடன் கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் கூட்டத்தில் பேசியதாவது:

கடந்த பருவ மழைக்கு முன்னர் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் ஆணையாளர் கண்ணன் மற்றும் பொறியாளர் கணேசன் பல்வேறு பகுதிகளில் மாமன்ற உறுப்பினர்களின் அழைப்பின் பேரில் நேரில் சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினர்.

அதன்படி அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட பணிகளை ஆய்வு செய்து தக்க ஆலோசனைகளை வழங்கிய நிலையில், பருவமழையின் போது நீர் தேங்கிய பகுதிகளிலும் அனைத்து பகுதிகளிலும் நேரில் சென்று உடனடியாக தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்த அறிவுறுத்தி உடனடியாக செயல்பட்ட அனைத்து நபர்களையும் இந்தத் தருணத்தில் பாராட்டுகிறேன்.

பருவமழை மற்றும் இதர சம்பவங்களில் பொதுமக்களிடம் பதட்டத்தை உருவாக்காமல், அவர்களிடம் பக்குவமாக பேசி குறைகளை நீக்கும் வகையில் செயல்பட வேண்டும். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 3 மகளிர் பள்ளிகளில் நவீன கழிப்பறைகள் கட்டப்பட உள்ளது. இவரை அவர்களின் ஆரோக்கியத்தை காக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது என்ற செய்தியை இங்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மாமன்ற உறுப்பினர்கள் முதலில் தங்கள் பகுதியில் உள்ள நிலவரங்களை புள்ளி விவரங்களுடன் தெரிந்து கொண்டு , அந்தப் பகுதிக்கு தேவையான திட்டங்களை தீட்டி சட்டமன்ற உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோரின் தொகுதி மேம்பாட்டு நிதி பெரும் வகைகள் உங்களது செயல் திட்டம் இருக்க வேண்டும். அதை நீங்கள் முதலில் புரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் எளிதாக புரியும் வகையில் தெரிவிக்க வேண்டும்.

மேலும், வார்டு பகுதி மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளுக்கும் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்க தயாராக இருக்கிறேன். அது அரசு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்பதும் கட்டாயம். மாமன்ற உறுப்பினர்கள் கூறியது போல் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுடன் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தி அதன் மூலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி சாலைகள் மேம்பட நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் தெரிவித்தார்.

அவசரக் கூட்டத்தில் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், ஆணையாளர் கண்ணன், பொறியாளர் கணேசன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Nov 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  2. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  3. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  7. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  9. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  10. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...