/* */

காஞ்சிபுரம் பாமக கோட்டையாக மாறும்: மாவட்ட செயலாளர் மகேஷ்குமார்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாமக எழுச்சி பெற்று கோட்டையாக மாறும் என புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட செயலாளர் மகேஷ் குமார் தெரிவித்தார்

HIGHLIGHTS

காஞ்சிபுரம் பாமக  கோட்டையாக மாறும்: மாவட்ட செயலாளர் மகேஷ்குமார்
X

புதிய பாமக மாவட்ட செயலாளராக பதவியேற்ற பெ. மகேஷ் குமாருக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்தி கமலா அம்மாள் மகளிர் அணியுடன் வாழ்த்து தெரிவித்தபோது

கடந்த சட்டமன்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்டு மிகக் குறைந்த இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே சரியான புரிதல் இல்லாத காரணத்தால் இந்நிலையை சந்தித்ததாகவும் இனிவரும் காலங்களில் இதுபோன்று நிகழாமல் மீண்டும் எழுச்சி பெற வேண்டுமென நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

மேலும் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளை மாற்றம் செய்யவும் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் முடிவெடுத்து பல மாவட்டங்களில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மாநில இளைஞரணி துணைச் செயலாளராக இருந்து வந்த திருப்பி மகேஷ்குமாரை மாவட்ட செயலாளராக நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.

இதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்த புதிய மாவட்ட செயலாளர் மகேஷ் குமார், பாட்டாளி மக்கள் கட்சியில் பல்வேறு நிலை பொறுப்புகளில் திறன்பட மேற்கொண்டு பல தேர்தல்களில் தொண்டர்களுடன் பணியாற்றிய அனுபவம் உள்ளதால் மீண்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாமக எழுச்சி பெற்று பாமகவின் கோட்டையாக விரைவில் காஞ்சிபுரம் மாவட்டம் மாறும் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

புதிய மாவட்ட செயலாளராக பொறுப்பு பெற்றுக்கண்ட மகேஷ்குமார் கட்சி நிர்வாகிகள் மூத்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்தி கமலாஅம்மாள் உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் அனைவரும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Updated On: 26 Nov 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  2. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  3. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  4. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  5. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  7. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  8. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  9. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  10. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...