குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!

குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
X
நண்பர்களாக பழகுவோரில் சிலர் குடும்ப உறவாகவே மாறிவிடுவார்கள். நண்பனின் தாயும் நண்பனுக்குத் தயாவார்.ஒன்றாக உண்டு, ஒன்றாக உறங்கி இணை பிரியாமல் இருப்பார்கள்.

Brother from Another Mother Quotes in Tamil

உடன்பிறந்த சகோதரர்களை விட சில சமயங்களில் நெருக்கமாகி விடும் நண்பர்கள் உண்டு. அப்படிப்பட்ட நெருக்கமான நண்பர்களைத் தான் ஆங்கிலத்தில் "Brother from another mother" என்று குறிப்பிடுவார்கள். இந்த நட்பின் வலிமையையும், நெருக்கத்தையும் கொண்டாடும் வகையில் இதோ உங்களுக்காக தமிழ் மேற்கோள்கள்.

Brother from Another Mother Quotes in Tamil

அண்ணன் தம்பி உறவை வலுப்படுத்தும் மேற்கோள்கள் :

"நண்பனெனில் உயிரானவன், அவன் தம்பியெனில் உலகமானவன்."

"பிறப்பால் வரலாம் சகோதரத்துவம், ஆனால் உள்ளத்தால் மட்டுமே வருகிறது உண்மையான அண்ணன் தம்பி பாசம்."

"அண்ணனோ தம்பியோ, தேவைப்படும் போதெல்லாம் தோள் கொடுப்பவனே உண்மையான உறவு."

"ரத்த பந்தம் இல்லையென்றாலும், நேச பந்தம் நம்மை இணைத்து வைக்கும்."

"உடன்பிறவா சகோதரனை தேர்ந்தெடுக்க முடியாது, ஆனால் உடன்பிறவா சகோதரனைப் போன்ற நண்பனை தேர்ந்தெடுக்கலாம்."

Brother from Another Mother Quotes in Tamil

"தோளோடு தோள் சேர்ந்து, கை கோர்த்து நடப்பது தான் சகோதர பாசம்… அது ரத்தத்தால் வந்தாலும் சரி, நட்பால் வந்தாலும் சரி."

"நெருக்கடியில் நிற்பவனே நெஞ்சுக்கு நெருக்கமானவன்… அந்த உறவுக்கு பெயர் தான் அண்ணனோ தம்பியோ"

"தவறு செய்தால் தட்டிக்கேட்பவன், தடம் மாறினால் திருத்துபவன், தலை குனிந்தால் தாங்குபவன் என்றுமே உயிர் உள்ளவரை உடன் இருப்பான்."

"நீ இருக்கிறாய் என்ற தைரியம் தான் சகோதரனின் மிகப்பெரிய பலம்."

"ஏளனம் செய்யும் உலகில், உத்வேகம் ஊட்டும் ஒரே குரல், உன் சகோதரனின் தான்."

Brother from Another Mother Quotes in Tamil

"வாழ்க்கைப் பயணத்தில் உடன் வரும் வழிகாட்டி நீ… என் உடன்பிறவா சகோதரனாய் வாய்த்த நண்பனே!"

"எந்தக் கஷ்டம் வந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காத பாசம் தான் சகோதரத்துவம்."

"அண்ணனாய், தம்பியாய், நண்பனாய் - எந்த உறவாயினும் அன்பில் மாறாதவன் தான் உண்மையான உறவு."

"ரகசியங்களை பகிர்ந்து கொள்ள, ரகளைகள் செய்ய, வாழ்க்கையை உற்சாகமாக்க ஒரு உடன்பிறவா தம்பி இருப்பது வரம்."

"நீ எனக்காக இழப்பதும், நான் உனக்காக செய்வதும் தான் இந்த நட்பின் பிணைப்பு."

Brother from Another Mother Quotes in Tamil


"உன் வெற்றியை என் வெற்றியாக நினைப்பவன், உன் தோல்வியை தன் தோல்வியாக ஏற்பவன், அப்படி ஒருவன் இல்லையென்றால் வாழ்க்கை அர்த்தமற்றது."

"நல்ல நேரத்திலும் கெட்ட நேரத்திலும் நம்மை புரிந்து கொண்ட ஒரு சகோதர உறவு கிடைப்பது அதிர்ஷ்டம்."

"சண்டை போட்டாலும், சகித்துக் கொண்டாலும், அடுத்த நொடியே அரவணைத்துக் கொள்ளும் பக்குவம் இருப்பது தான் உண்மையான அண்ணன் தம்பி பாசம்."

"பேசாமல் பார்வையிலேயே பேசிக்கொள்ளும் அற்புதம் நம் நட்பிற்கு மட்டுமே உண்டு."

"கூடப்பிறந்தவர்கள் சில நேரம் சகோதரர்களாக இருப்பதில்லை, ஆனால் உன்னை போன்ற நண்பர்கள் எப்போதும் சிறந்த சகோதரர்களாகவே திகழ்கிறார்கள்."

Brother from Another Mother Quotes in Tamil

நீ இருக்கும் வரைக்கும் பைத்தியக்காரத்தனத்துக்கு பஞ்சமில்லை!"

"என்னை விட உன்னை யாராலும் நல்லா கலாய்க்க முடியாதுடா…அதுக்கு தான் நீ என் தம்பி."

"அவமானம், அசிங்கம் எல்லாத்தையும் சேர்ந்து அனுபவிச்சா தான் அது உண்மையான நட்பு."

"உன் கூட சேர்ந்து குறும்பு பண்ணாத நாள் எல்லாம் வீணா போன நாள் தான்."

"நம்மள மாதிரி அறிவாளிகளை இந்த உலகம் புரிஞ்சுக்கிறது ரொம்ப கஷ்டம்!"

Brother from Another Mother Quotes in Tamil

Heartfelt Quotes

"என்னை நானே நம்ப ஆரம்பித்தது உன் நட்பு கிடைச்ச பிறகு தான்."

"குடும்பம் தவிர்த்து என்னைப் பற்றி முழுசா தெரிஞ்சு வெச்சிருக்கிற ஒரே ஜீவன் நீ தான்."

"நல்லது கெட்டதுல பாகுபாடின்றி எனக்கு துணையா நிப்பவன் நீ மட்டும் தான்."

"நீ எனக்கு வெறும் நண்பன் இல்லை, வாழ்க்கை தந்த வரம்."

"உனக்காக நான் இருப்பேன், எனக்காக நீ இருப்பாய் – இது போதும் இந்த வாழ்க்கைக்கு."

Brother from Another Mother Quotes in Tamil

"அண்ணன் - தம்பின்னு இல்லாம கூட, நீ என் கூடவே இருக்கிறதே எனக்கு பெரிய பலம்."

"சில பந்தங்கள் ரத்தத்தால் வருவதில்லை, அது இதயத்திலிருந்து தான் பிறக்கிறது."

"என்னை உலகமே தவறாக நினைத்தாலும் நீ மட்டும் என்னை நம்பினால் போதும்."

"நட்பின் அர்த்தம் நீ… என் வாழ்வின் வரம் நீ…"

"என் வலிகளை புன்னகையாய் மாற்ற வல்லவன் நீ தான்."

Brother from Another Mother Quotes in Tamil


Motivational Quotes

"உன் நம்பிக்கை இருக்கும் வரைக்கும் தோல்வியே கிடையாது."

"சரி, தவறுகளை தாண்டி ஒன்னா நிற்பது தான் நம்ம நட்பு."

"உன் தோள் கொடுத்த தைரியத்தில் தான் எத்தனையோ சாதனைகள்."

"எங்கே விழுந்தாலும், எழுந்து நிக்க, தூக்கி விட நீ இருக்கற வரைக்கும் கவலையில்லை."

"எதிர்த்து நிற்பது உலகம் என்றால், அதை எதிர்கொள்ள தைரியம் தருபவன் நீ."

Brother from Another Mother Quotes in Tamil

"உலகமே பகை ஆனாலும், நீ எனக்காக நின்றால் அதுவே எனக்கு வெற்றி."

"எத்தனை தூரம் சென்றாலும், நமக்கென்று ஒரு தனி உலகம் எப்போதும் இருக்கிறது."

"எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அத உடைச்சு நொறுக்கிற பலம் நம்ம நட்புக்கு இருக்கு."

"வாழ்க்கைங்கிறது ஒரு போர்க்களம் தான். உன்னைப் போன்ற ஒரு வீரன் தோள் கொடுக்க, எனக்கு பயமே இல்லை."

"வெற்றி தோல்விகள் மாறி மாறி வரலாம்… ஆனால் என்றும் மாறாதது நம் நட்பு."

Brother from Another Mother Quotes in Tamilfamil

"வாழ்க்கை என்ன கற்றுத் தந்தாலும், நீ எனக்கு கற்றுத் தந்த பாடங்கள் தான் என் உண்மையான செல்வம்."

"சில சமயம் பெற்றோரை விடவும், உன்னிடம் தான் என் மனதை திறந்து வைக்க முடிகிறது."

"கடந்து போன காலத்தின் அழகான நினைவுகளில் எல்லா இடங்களிலும் நீ இருக்கிறாய்."

"என்னை விடவும் என்னைப் பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்கும் விந்தை நீதான்."

"சிறு வயதில் செய்த சேட்டைகள் முதல், இப்போது வரைக்கும் செய்யும் தவறுகள் வரை, எல்லாத்தையும் பொறுத்துக்கொள்ளும் பொறுமை உனக்கு மட்டும் தான் இருக்கு."

Brother from Another Mother Quotes in Tamil

"நீ என்னுடன் இல்லாத நாட்களை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது."

"மனைவி, குழந்தைகள் என்று ஒரு குடும்பம் அமைந்தாலும், உன் இடம் என்றும் தனித்துவமானது."

"வாழ்க்கையின் இறுதி வரை, நான் உனக்காகவும், நீ எனக்காகவும் இருப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது."

"ரத்த பந்தமில்லாமல் கூட இப்படி ஒரு பிணைப்பா? இது தான் நம் நட்பின் மகத்துவம்."

"உடன்பிறந்த சகோதரன் இல்லாத குறையை, நீ என்றும் போக்கிவிட்டாய்!"

Tags

Next Story