/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலைத் திருவிழா இறுதி போட்டிகள் துவக்கி வைப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி அளவில் துவங்கி, வட்டார அளவில் அடுத்த கட்டமாகவும், தற்போது இறுதி போட்டி நடைபெறுகிறது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலைத் திருவிழா இறுதி போட்டிகள் துவக்கி வைப்பு
X

காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் கலை திருவிழாவில் இறுதிப் போட்டிகளில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்திய மாணவ, மாணவிகள்.

தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு நடுநிலை உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் பங்கேற்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகள் கலைத் திருவிழாவாக பள்ளி அளவில் 26.11.22 முதல் 28.11.22 வரை நடைபெற்றன.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 52 மேல் நிலைப் பள்ளிகள், 50 உயர் நிலைப் பள்ளிகள் மற்றும் 116 நடுநிலைப்பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள் மிக சிறப்பாக நடத்தப்பட்டன.

6 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 36 வகையான போட்டிகளும், 9&10 வகுப்பு மாணவர்களுக்கு 78 வகையான போட்டிகளும் 11&12 வகுப்பு. மாணவர்களுக்கு 82 வகையான போட்டிகளும் நிர்ணயிக்கப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 60681 மொத்த மாணவர்களில் 46191 மாணவர்கள் பள்ளி அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா நிகழ்வில் பங்கேற்றனர்.

பள்ளி அளவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெற்ற மாணவர்களில் கிட்டத்தட்ட 19292 மாணவர்கள் வட்டார அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், திருப்பெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஆகிய 5 வட்டாரங்களில் 29.11.22 முதல் 3.12.22 வரை வட்டார அளவில் நடத்தப்பட்ட 196 தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மாவட்ட அளவிலான போட்டிகள் இன்று துவங்கிறது. காஞ்சிபுரம் எஸ்.எஸ்கே.வி பள்ளியில் நடைபெற்ற துவக்க விழா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமையில் துவங்கியது.

இந்நிகழ்வில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மாகலட்சுமியுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

துவக்க விழாவில் மாணவர்களிடையே சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் பேசுகையில் , தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் வழியில் இப் போட்டிகள் நடைபெறுவதாகும் இதனை பயன்படுத்திக் கொண்டு சாதனையாளர்களாக மாற வேண்டும் என தெரிவித்தார்.

இதன்பின் மாணவிகள் பல்வேறு நாடகங்களை சிறப்பு விருந்தினர்கள் முன்பு நடனமாடி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 பள்ளிகளில் போட்டிகள் நடைபெறுகிறது.

இந்நிகழ்வில் , காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ. வெற்றிசெல்வி உள்ளிட்ட பள்ளி மாணவர்கள் , போட்டி நடுவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

போட்டிகள் இன்றிலிருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் மாணவர்கள் பல்வேறு வகை பிரிவில் தங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்துவர் . இதில் சிறந்த மாணவர்கள் மாநில அளவில் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

பள்ளி மாணவர்களின் இந்த கலைத் திருவிழா போட்டி பல மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வர உதவுவது மட்டுமில்லாமல் , அவர்கள் அச்சத்தை விட்டு வெளியே வந்து நல்ல தலை சிறந்த மாணவனாக உருவாக்க பேச்சு போட்டிகள் போட்டிகள் உதவுகிறது என பெற்றோர்கள் தெரிவித்தனர்.

Updated On: 6 Dec 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  2. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  3. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மீன ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. தொழில்நுட்பம்
    ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: துலாம் ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. உலகம்
    கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகளா? அஸ்ட்ராஜெனகா விளக்கம்
  9. லைஃப்ஸ்டைல்
    வெயிலை விரட்டுங்கள்: இந்தியாவின் கோடைக்கால பழங்கள்!
  10. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு