ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!
பயிற்சியில் ஈடுபட்ட மீட்புக் குழுவினர் கோப்புப்படம்
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பாராசூட் சோதனையில் இஸ்ரோ ஈடுபடவுள்ளது.
ஆரம்பகட்டமாக மாதிரிகளை பாராசூட்டில் அனுப்பி சோதனை செய்யப்படவுள்ளது.
இதற்கு அடுத்தகட்ட சோதனைகளில் மனிதர்களை வைத்து இஸ்ரோ சோதனையில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அடுத்த சில நாட்களில் குழு தொகுதியின் பாராசூட் அமைப்பை சரிபார்க்க ககன்யான் திட்டத்தின் கீழ் ஒரு முக்கியமான சோதனையை மேற்கொள்ள வாய்ப்புள்ளது
ஒருங்கிணைந்த ஏர் டிராப் டெஸ்ட் முறையில் இந்த பாராசூட் சோதனை நடத்தப்படவுள்ளது. நிபந்தனைகளுக்குட்பட்ட வழிகளில் ஏர் டிராப் டெஸ்ட் முறையில் பாராசூட் சோதனை செய்யப்படுவது இதுவே முதல்முறை.
அதாவது, பாராசூட் திறக்கப்படாமலும், பாராசூட் திறந்தபடியும், பகுதியளவு சென்று திறப்பதை போன்று - என மூன்று வழிகளில் சோதனை செய்யப்படுகிறது. 4 - 5 கிலோமீட்டர் உயரத்திலிருந்து பாராசூட் பரிசோதனை செய்யப்படவுள்ளது.
அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் சோதனை நடத்தப்படும். முதல் ஐஏடிடி பெயரளவிலான நிபந்தனைகளின் கீழ் பாராசூட் அமைப்பைச் சோதிக்கும், அதாவது இரண்டு பாராசூட்களும் சரியான நேரத்தில் திறக்கப்படும்போது, குழு தொகுதியின் ஸ்பிளாஷ் டவுன் செயல்முறையைப் பிரதிபலிக்கும், இந்த பாராசூட் பரிசோதனைக்கு கடற்படை உதவியும் கோரப்பட்டுள்ளது.
நிலவின் தென் துருவத்தில் செயற்கைகோளை தரையிறக்கி சாதனை படைத்த இஸ்ரோ, மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பி ஆராய்ச்சி செய்யும் திட்டத்தை கடந்த 2007-இல் உருவாக்கியது.
ரூ.10 ஆயிரம் கோடி செலவில் கட்டமைக்கப்படவுள்ள இந்தத் திட்டத்துக்கு ககன்யான் என 2014-இல் பெயரிடப்பட்டது.
விண்கலம் மூலம் நான்கு விஞ்ஞானிகளை விண்வெளிக்கு அனுப்பி பூமியில் இருந்து 470 கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தி 2 வாரங்கள் தங்கியிருந்து ஆராய்ச்சி மேற்கொள்ளச் செய்வதே இத்திட்டத்தின் நோக்கம்.
இதற்கான விண்கலம் தயாரிக்கும் பணிகளும், விண்வெளிக்குச் செல்லும் விஞ்ஞானிகளுக்கு பயிற்சியும் நடைபெற்று வருகின்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu