குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மீன ராசிக்கு எப்படி இருக்கும்?

குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மீன ராசிக்கு எப்படி இருக்கும்?
X

நிகழும் மங்களகரமான குரோதி வருஷம் உத்தராயணம் வஸந்த ருது சித்திரை மாதம் 18-ம் நாள் (01.05.2024) அன்றைய தினம் கிருஷ்ணபக்‌ஷ அஷ்டமியும், புதன்கிழமையும், திருவோண சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 28.22-க்கு - மாலை 05.01-க்கு துலாம் லக்னத்தில் குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார்.

மீனம் குரு பகவானை ராசிநாதனாகக் கொண்ட மீன ராசி அன்பர்களே! நீங்கள் இரக்க சிந்தனை கொண்டவர்கள். இந்த பெயர்ச்சியில் குரு பகவான் தனவாக்கு ஸ்தானத்தில் இருந்து தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். உங்களது சப்தம ஸ்தானம் - பாக்கிய ஸ்தானம் - லாப ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

இந்தப் பெயர்ச்சியில் குருபகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்திற்கு வருகிறார். அவரது விசேஷப் பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே ஏழு, ஒன்பது, பதினோராம் இடங்களில் பதிகின்றன. இதனால் குடும்பத்தில் அமைதி நிலவும், பூர்வீக சொத்து சேரும், வரவு சீராக இருக்கும். அதேசமயம் எதிலும் தலைகனம் தவிர்ப்பது அவசியம். அலுவலகத்தில் நன்மைகள் அதிகரிக்கும். மேலதிகாரிகளிடம் வீண் தர்க்கம் தவிருங்கள். பிறரைக் குறைகூறுவதும் கூடாது. திட்டமிடலும் நேரம் தவறாமையும் முக்கியம். பதவி, ஊதிய உயர்வுகள் தாமதமானாலும் நிச்சயம் கைகூடும், பொறுமை முக்கியம். புதிய பதவிகளில் அலட்சியம் கூடாது. வீட்டில் ஒற்றுமை இடம்பிடிக்கும். அதை வார்த்தைகளால் விரட்டிவிட வேண்டாம். உறவுகளிடம் பழைய கசப்பை பேசுவதைத் தவிருங்கள். வாரிசுகள் வாழ்வில் சுபதடைகள் நீங்கும். வரவு சீரானாலும் செலவுகளும் சேர்ந்து வரும். வீண் ஆடம்பரம் தவிருங்கள். கடன் தருவது, பெறுவதில் கவனம் தேவை. செய்யும் தொழிலில் நேரடி கவனம் முக்கியம்.

உழைப்புக்கு ஏற்ப உயர்வுகள் கிட்டும். அரசு வழி அனுமதிகளில் அலட்சியம் வேண்டாம். அரசியலில் இருப்போர்க்கு தொடர்ச்சியான வளர்ச்சி ஏற்படும். சகவாச தோஷத்தால் அதை இழக்க நேரிடலாம், கவனம். அரசுப்பணி புரிவோர், திறமைக்கு ஏற்ப உயர்வுகளை பெறுவீர்கள். பணியிடக் கோப்புகளை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். கலைஞர்களும் படைப்பாளிகளும் சீரான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சின்சியர் செயல்பாடு வளர்ச்சியைத் தொடர்ச்சியாக்கும். மாணவர்கள் எதிர்கால நன்மைக்கு இப்போதே உத்தரவாதம் கிட்டும். பயணப்பாதையில் பிறர் தரும் எதையும் உட்கொள்ள வேண்டாம். ஸ்ரீரங்கம் ரங்கநாதர், தாயார், கொடி மர கருடன் வழிபாடு, சிறப்பான நன்மை தரும்.


நட்சத்திர பலன்கள்

பூரட்டாதி 4ம் பாதம்:

இந்த குரு பெயர்ச்சியால் புதிய வேலை தேடுபவர்களுக்கு தாமதமானாலும் நல்லவேலை கிடைக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் மனதில் இறுக்கம் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் வீண் வாக்குவாதம் ஏற்படும். பிள்ளைகள் மூலம் செலவு இருக்கும்.

உத்திரட்டாதி:

இந்த குரு பெயர்ச்சியால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வாகனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். மனநிம்மதி கிடைக்கும். காரிய வெற்றி உண்டாகும். நீண்டநாட்களாக நினைத்திருந்த காரியம் வெற்றி அடையும். மேலிடத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். பண வரத்து உண்டாகும். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது நல்லது. வியாபாரிகளுக்கு காரிய தடை ஏற்படலாம். கவனம் தேவை. காரிய அனுகூலம் உண்டு. ஆனால் தாமதப்படும். எதிர்ப்பார்த்த பணவரவு தாமதமாக கிடைக்கும். கூட்டுத் தொழில் லாபம் அடையும். கடின உழைப்பு காரிய வெற்றியைத் தேடித்தரும். வெளியூர் சென்றுவர நேரிடலாம்.

ரேவதி:

இந்த குரு பெயர்ச்சியால் மனதில் கவலை ஏற்பட்டு நீங்கும். எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் காரிய தடங்கல் ஏற்படும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. பயணத்தினால் வீண் செலவும், அலைச்சலும் உண்டாகும். சாதகமான பலன்கள் உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். புதிய ஆர்டர்கள் தொடர்பாக அலையும்படி இருந்தாலும் சாதகமாக முடியும்.

பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். பயணங்களின் போது உடமைகளை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்துடன் வெளியூர் சென்று வருவீர்கள்.

Tags

Next Story
அதிர்ச்சி சம்பவம்: வெள்ளித்திருப்பூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் - சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பொதுமக்கள் அச்சம்