/* */

மாநில அளவிலான கராத்தே போட்டியில் பதக்கங்களை குவித்த காஞ்சிபுரம் வீரர்கள்

Karate Competition -மாநில அளவிலான சப் ஜூனியர் கராத்தே போட்டியில் காஞ்சிபுரம் வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்தனர்.

HIGHLIGHTS

மாநில அளவிலான கராத்தே போட்டியில் பதக்கங்களை குவித்த காஞ்சிபுரம் வீரர்கள்
X

38வது சப் ஜூனியர் கராத்தே போட்டியில் தங்கம் வெள்ளி பதக்கத்தை வென்ற காஞ்சிபுரம் வீரர் வீராங்கனைகள்.

Karate Competition -தற்போதைய காலகட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு கல்வியுடன் அவர்களுக்கு விருப்பமான விளையாட்டு துறைகளில் பள்ளி கல்வித்துறை சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் தனியார் தற்காப்பு கலை நிறுவனங்களும் கராத்தே , சிலம்பம், வாள்வீச்சு மற்றும் பல்வேறு விளையாட்டுகள் குறித்த பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்காப்பு கலை என்பது தற்போது வளர் இளம் பருவ பெண்களுக்கு மிக முக்கியமாக தேவைப்படுவதால் பல்வேறு தற்காப்பு கலைகளை ஆர்வமுடன் இளம் வயதில் இருந்தே கற்று வருகின்றனர்.

இதற்குப் பெற்றோர்களும் முழு ஆதரவு அளித்து பள்ளி நேரம் முடிவுற்றதும் மற்றும் விடுமுறை தினங்களில் தங்கள் குழந்தைகளை அழைத்து சென்று இந்த பயிற்சியை மேற்கொள்ள உதவுவதும் குறிப்பிடத்தக்கது.

இது மட்டும் இல்லாமல் இந்த தற்காப்புகளை தங்களை அனைத்து வயதிலும் எதிரிகளிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ளவும் குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும் இது பெரிதும் உதவுவதால் அனைத்து தரப்பு துறை அலுவலர்களும் தங்கள் கூட்டங்களில் இதை தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக பள்ளிகளில் நடைபெறும் கூட்டங்கள் மற்றும் வழிபாட்டு நேரங்களில் இது குறித்த விழிப்புணர்வு பள்ளி மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டு ஏதாவது ஒரு துறையில் பிரகாசிக்க இது வாய்ப்பாகவும் அமையும் என்பதால் இதனை அனைவரும் பின்பற்றுமாறும் ஆசிரியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

அவ்வகையில் தற்போது போட்டிகளும் இவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவ்வப்போது நடைபெற்று அதில் பரிசு பெறும் நிலையில் இதில் கற்கும் மாணவ மாணவிகளும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

அவ்வகையில் சென்னை-செயின்ட் தாமஸ் மவுண்டில் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே-டூ அசோசியேஷன் சார்பில் 38-வது தமிழ்நாடு மாநில சப் ஜூனியர் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.இதில் தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

8 முதல் 13 வயது வரையிலான வீரர்கள் பங்கேற்ற இந்த சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் காஞ்சிபுரம் சாம்பியன்ஸ் ஸ்போர்ட்ஸ் கராத்தே அகாடமி பயிற்சியாளர் பிரகாஷ் பயிற்சியில் பயின்ற சாம்பியன்ஸ் ஸ்போர்ட்ஸ் கராத்தே அகாடமி வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு ஏழு தங்கப்பதக்கங்களும் ஒரு வெள்ளி பதக்கமும் மூன்று வெண்கல பதக்கங்களும் வென்றனர்.

இந்த மாநில அளவிலான கராத்தே போட்டியில் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கங்களை வென்ற ஏழு வீரர்களும் அடுத்து டெல்லியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வட்ட, மாவட்ட தேசிய அளவிலான போட்டிகளில் குறிப்பாக தற்போது மாணவ மாணவிகள் அதிகளவில் பதக்கங்களை வென்று காஞ்சி மாவட்டத்திற்கு பெருமை தேடி வந்து வரும் வகையில் செயல்பட்டு வருவது அனைத்து தரப்பினருக்கும் தங்கள் குழந்தைகளையும் இதுபோன்று ஈடுபடுத்த வேண்டும் என உத்வேகம் காட்ட இவர்களின் சாதனை உதவுவதாக போட்டியாளர் மற்றும் பயிற்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 10 Nov 2022 11:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?