/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி துவக்கம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முன் கள மற்றும் சுகாதாரப்பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாம் துவங்கப்பட்டது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி துவக்கம்
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

முன் களப்பணியாளர்களுக்கு தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள மேலும் ஒரு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தி கொள்வது அவசியம் என உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி இன்று காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் மா. ஆர்த்தி முன் கள மற்றும் சுகாதார பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் முகாமினை தொடங்கி வைத்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முன்கள சுகாதார பணியாளர்கள் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் என மொத்தம் 5898 பேர் உள்ளனர்.

இரண்டாம் தவணை தடுப்பூசி கோவாக்சின் அல்லது கோவிட்ஷீல்டு செலுத்திய மேற்கண்ட பயனாளிகள் 39 வாரங்களுக்கு பிறகு இந்த முன்னெச்சரிக்கை தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம் என இந்திய மருத்துவ கழகம் தெரிவித்துள்ளது.

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் கொரோனா கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

இந்நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளர் சுதாகர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் .க.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மரு. ஜீவா, துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) சித்தரசேனா மற்றும் மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 10 Jan 2022 8:31 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  2. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  3. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  7. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  9. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  10. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...