/* */

காஞ்சிபுரத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற் தகுதி தேர்வு துவங்கியது

காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு காவல்துறையில் தீயணைப்பு மற்றும் சிறைத்துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு துவங்கியது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற் தகுதி தேர்வு துவங்கியது
X

காஞ்சிபுரத்தில் 2ம் நிலை காவலருக்கான உடற் தகுதி தேர்வு தொடங்கியது.

தமிழ்நாடு காவல் துறையில் 2020 ஆம் ஆண்டிற்கான தீயணைப்பு மற்றும் சிறைத்துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர் காண எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்றது.

இதில் தேர்வான காஞ்சிபுரம் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 3028 தேர்வுக்கான உடல் தகுதி தேர்வு இன்று காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள அறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கில் துவங்கியது.

இந்த உடல் திறன் தகுதித்தேர்வில் பங்கேற்க உள்ள நபர்கள் தங்களது அனுமதி நுழைவு சீட்டில் குறிப்பிட்ட அழைப்பு நாட்களுக்கு 4 நாட்களுக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்து அதன் அறிக்கையை வைத்திருந்த நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

முதலில் சான்றிதழ்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு மார்பளவு , உயரம் உள்ளிட்டவை காவல் துறை தேர்வு அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டது.

இதன்பின் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம் அதன்பின் கயிறு ஏறுதல் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெற உள்ளது.

முறைகேடு இன்றி தேர்வு நடைபெற அனைத்து இடங்களிலும் கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்படுகிறது. இது மட்டுமில்லாமல் அரங்கம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளது ‌‌.

Updated On: 26 July 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  2. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  3. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  4. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  5. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  9. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  10. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?