/* */

காஞ்சிபுரம் பிரமோற்சவ தேரை தூய்மைப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள்

காஞ்சி ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவ தேரினை சுத்தப்படுத்தும் பணியில் தீயணைப்பு படைவீரர்கள் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் பிரமோற்சவ தேரை தூய்மைப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள்
X

அத்தி வரதர் புகழ் ஸ்ரீ காஞ்சி வரதராஜ பெருமாள் திருக்கோயில்.

வைகாசி மாத பிரம்மோற்சவத்தையொட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் திருத்தேர் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இதில் தீயணைப்பு வாகனத்தில் கொண்டு வந்த தண்ணீரை அதிவேக அழுத்தத்துடன் திருத்தேர் மீது பீய்ச்சி அடித்து கழுவி தீயணைப்பு வீரர்கள் சுத்தம் செய்தனர்.

உலகப் பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோவில் என அழைக்கப்படும், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவம் வரும் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி வரை நடைபெற உள்ளது.

பிரம்மோற்சவத்தையொட்டி காலை,மாலை, என இரு வேளையும் வரதராஜ பெருமாள் பல்வேறு வாகனங்களில் காஞ்சிபுரம் நகரின் ராஜ வீதிகளில் வீதி உலா வந்து அருள் பாலிக்க உள்ளார்.


பிரம்மோற்சவத்தில் முக்கிய உற்சவமான கருட சேவை உற்சவம் ஜூன் 2ம் தேதியும், திருத்தேர் உற்சவம் ஜூன் 5-ம் தேதியும் நடைபெறுகிறது. வைகாசி பிரம்மோற்சவத்தில் முக்கிய உற்சவமான திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் காந்தி சாலை தேரடி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சுமார் 55 அடி உயரம் உள்ள திருத்தேரினை தயார் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது.

முதற்கட்டமாக திருத்தேரில் படிந்துள்ள தும்பு, தூசிகளை அகற்றிடும் வகையில் காஞ்சிபுரம் தீயணைப்பு துறை வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு வாகனத்தில் கொண்டு வந்த தண்ணீரை அதிவேக அழுத்தத்துடன் தேர் மீது பீய்ச்சி அடித்து திருத்தேரினை கழுவி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது


இதேபோல் திருக்கோயில் வளாகத்தில் பந்தல் அமைக்கும் பணி மற்றும் வாகனங்கள் சுத்தம் செய்யும் பணி உள்ளிட்டவர்களை இந்து சமய அறநிலைத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கருட சேவை வாகனம் மற்றும் திருத்தேர் வாகனங்கள் புகழ்பெற்ற நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இதில் எழுந்தருளும் ஸ்ரீ வரதராஜ ஸ்வாமி தரிசிக்க காஞ்சிபுரம் வருகை புரிவதும் , கருட சேவை நிகழ்வன்று உள்ளூர் விடுமுறை விடப்படுவதும் வழக்கமான ஒன்றாகும்.

Updated On: 28 May 2023 2:28 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?