/* */

காஞ்சிபுரத்தில் இரண்டாவது நாளாக காவலர் தேர்வு: 787 பேர் பங்கேற்பு

காஞ்சிபுரத்திலுள்ள அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கில் காவலர்களுக்கான உடன் தகுதி தேர்வில் 787 நபர்கள் உடற்தகுதி தேர்வுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் இரண்டாவது நாளாக காவலர் தேர்வு: 787 பேர் பங்கேற்பு
X

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காவலர் தேர்வில் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள்.

தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர், சிறை துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்டவைகளில் உள்ள 3552 காலி பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளதாக சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்து அதற்கான விண்ணப்பங்கள் மூன்று லட்சத்திற்கு மேல் பெறப்பட்டது.

இதனையடுத்து தமிழகம் முழுவதும் இரண்டு லட்சத்து 99 ஆயிரத்து 820 பேர் எழுத்துத்தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டு அதில் வெற்றி பெற்ற நபர்களுக்கு தேர்வனை மூலம் உடல் தகுதி தேர்வில் பங்கு பெற மாவட்ட வாரியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது 161 சிறை காவலர்கள் 3271 இரண்டாம் நிலை காவலர்கள் 120 தீயணைப்பு வீரர்கள் என மொத்தம் 3552 நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பாக காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நேற்று காலை 6 மணிக்கு தேர்வு துவங்கியது காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 787 பேர் உடன் தகுதி தேர்வுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று 420 நபர்கள் உடற்பகுதி தேர்வில் பங்கேற்றனர் இன்று இரண்டாவது நாளாக 367 நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உயரம் மற்றும் மார்பளவு 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம் என பல்வேறு பிரிவுகளில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வுப் பணிகளை காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் பகலவன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உள்ளிட்டோர் தேர்வு நடைபெறும் பகுதிகளை அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டும், தேர்வான நபர்களின் உயரம் மற்றும் மார்பளவுகளை சோதனை மேற்கொண்டும் தேர்வு உறுதி செய்கின்றனர்.

பலத்த காவல் சோதனைகளுக்குப் பிறகு தேர்வர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதும் , மொபைல் போன் உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டும் தேர்வு முழுவதும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு மற்றும் வீடியோ பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டு தேர்வு முறைகள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்பதாரர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோருக்கான குடிநீர் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது முதல் முதலுதவிக்காக 108 அவசர ஆம்புலன்ஸ் தயார் நிலையில் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்தது.

இதில் பங்கு பெற்றவர்களும் இரண்டாம் கட்டமாக நீளம் தாண்டுதல் உயரம் தாண்டுதல் குண்டு எறிதல் மற்றும் இரு பிரிவுகளான ஓட்டப் பந்தயம் உள்ளிட்டவைகளில் வரும் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர்வு மையங்களை தொடர்ந்து காவல் உதவி கண்காணிப்பாளர்கள், டிஎஸ்பிக்கள் என பலர் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 7 Feb 2023 11:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்