/* */

குற்றங்களை தடுக்க அதிநவீன கேமரா: காஞ்சிபுரம் ஆட்சியர், எஸ்பி ஆய்வு

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் குற்றங்களை தவிர்க்க, 15 லட்சம் மதிப்பில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

குற்றங்களை தடுக்க அதிநவீன கேமரா: காஞ்சிபுரம் ஆட்சியர், எஸ்பி ஆய்வு
X

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் புனரமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தினை ஆய்வு செய்த ஆட்சியர் ஆர்த்தி மற்றும் எஸ்.பி.சுதாகர்.

பட்டு நகரம் கோயில் நகரம் என்று புகழ்பெற்ற காஞ்சிபுரம் நகருக்கு, நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். காஞ்சிபுரம் நகரில் இருந்து பல மாவட்டங்களுக்கும் பொதுமக்கள் செல்ல காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தை நாடுகின்றனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் குற்றங்களைத் தடுக்கும் வகையில், சிவகாஞ்சி காவல் நிலைய கட்டுப்பாட்டில் பேருந்து நிலையத்தின் மையப் பகுதியில் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

மேலும், புறக்காவல் நிலையத்தை பொது விஞ்ஞான வளர்ச்சி கொன்று குற்றங்களை தடுக்கவும் , குற்றவாளிகளை உடனே கைது செய்யும் வகையில் சுமார் 15 லட்சம் மதிப்பில் காவல் நிலையம் புனரமைக்கப்பு, அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.

இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகரன், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியுடன் பணிகளை ஆய்வு செய்து பல்வேறு ஆலோசனைகள் மேற்கொண்டனர். பணிகள் நிறைவுற்று உடன் புறக்காவல் நிலையத்தில் காவலர்கள் இருபத்திநான்கு மணிநேரமும் தொடர்பு பணியில் இருப்பார்கள் என கூறப்படுகிறது.

Updated On: 7 Feb 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ஆபத்தான செயலிகள்: உஷாராக இருங்கள்!
  2. ஆவடி
    திருவள்ளூர் அருகே விஷம் குடித்து ஜிம் பயிற்சியாளர் தற்கொலை
  3. லைஃப்ஸ்டைல்
    2 மாத திருமண ஆண்டு விழா வாழ்த்துக்களும் விளக்கங்களும்
  4. லைஃப்ஸ்டைல்
    முதல் திருமண நாள் வாழ்த்துக்கள் கணவருக்கு - மேற்கோள்கள் மற்றும்...
  5. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  6. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு