/* */

பொன்னேரிக்கரை பகுதியில் இரயில்வே மேம்பாலம் திறப்பு

பொன்னேரிக்கரை பகுதி ரயில்வே மேம்பாலத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

HIGHLIGHTS

பொன்னேரிக்கரை பகுதியில் இரயில்வே மேம்பாலம் திறப்பு
X

புதிய ரயில்வே மேம்பால திறக்கப்பட்டபோது மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, எம்எல்ஏ எழிலரசன் இனிப்புகள் வழங்கினர் 

கடந்த 2011-2012ல் தமிழக முதல்வரால் சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் காஞ்சிபுரம் -பொன்னேரிக்கரை- சென்னை சாலையில் புதிய ரயில் நிலையம் அருகே உயர்மட்ட மேம்பாலம் சுமார் 69.28 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டபடும் என அறிவிக்கபட்டது.

உடனடியாக பணிகள் துவக்கப்பட்டு 2017ல் பணிகள் நிறைவுற்று நெடுஞ்சாலை மற்றும் சிறு குறு துறைமுகங்கள் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும் மேம்பாலம் திறக்கப்படாமல் இருந்ததால், மேம்பாலத்தை உடனடியாக திறக்க கோரி பல்வேறு வகையில் கோரிக்கைகள் எழுந்தது.

இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் காணொலிக் காட்சி மூலம் மேம்பாலங்களை திறந்து வைத்தார். அப்பகுதியில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் காஞ்சிபுரம் மாநகர மேயர் மகாலட்சுமியுவராஜ் , துணை மேயர் குமரகுருநாதன் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் நித்யா சுகுமார் மற்றும் மாநகராட்சி மண்டல குழு தலைவர் மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அவ்வழியாக வந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி போக்குவரத்தை துவக்கி வைத்தனர்.

இந்த மேம்பாலம் திறக்கப்பட்டதால் காஞ்சிபுரத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை ஆன சென்னை பெங்களூர் சாலையில் வாகனங்கள் தடையின்றி சென்று வரும். குறிப்பாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் இருந்து சென்னை அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை மாற்றம் செய்யும் போது 108 வாகனங்கள் குறித்த நேரத்தில் மருத்துவமனையை அடைய இது பெரிதும் உதவும். மேலும் இந்தியாவிலிருந்து பல இடங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு , பக்தர்களுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் தங்கு தடையின்றி செல்ல இது உதவும் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Updated On: 7 April 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?