/* */

காஞ்சிபுரம் : பெண்னை தாக்கி வழிப்பறி, வாலிபரை அதிரடியாக அள்ளி போலீஸ்

காஞ்சிபுரம் அருகே பெண்ணை தாக்கி 5 பவுன் தாலி செயினை பறித்த வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். எஸ்பி பாராட்டினார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் :  பெண்னை தாக்கி வழிப்பறி, வாலிபரை அதிரடியாக அள்ளி போலீஸ்
X

கைது செய்யப்பட்ட செயின் பறிப்பு குற்றவாளி,

காஞ்சிபுரம் உட்கோட்டம், பாலுச்செட்டிசத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழம்பி ஏரிக்கரையில் கடந்த3ம் தேதி மலர் என்பவர் கீழம்பி ஏரியில் மாடு மேய்த்துவிட்டு வேப்பமரத்தடியில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது அடையாளம் தெரியாத மர்ம நபர், மலரின் கழுத்து மற்றும் வாயை அழுத்தி பிடித்ததால் மலர் மயங்கியுள்ளார். அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க நகைகளை (3 சவரன் தாலி மற்றும் 2 சவரன் செயின்) பறித்துச் சென்றார்.

இதுகுறித்து அவரது மகன் வினோத்குமார் பாலுச்செட்டிசத்திரம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் உத்தரவிட்டதின் காரணமாக 05.08.21 அன்று வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

இவ்வழக்கினை சிறப்பாக விசாரணை செய்த தனிப்பிரிவு காவலர் சோமசுந்தரம் அவர்கள் மேற்படி குற்றச்சம்பவத்தில் முசரவாக்கம் பகுதியை சேர்ந்த சீராளன் என்பவர் ஈடுபட்டிருப்பதாக தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படையினர் உதவியுடன் மேற்படி எதிரியை கைதுசெய்து அவரிடமிருந்து வழக்கில் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை மீட்டனர்.

இவ்வழக்கில் சிறப்பாகவும் புலன்விசாரணை மேற்கொண்டு மற்றும் விரைவாகவும் செயல்பட்டு வழிப்பறி எதிரியை கைது செய்ய குழுவினரை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M. சுதாகர் வெகுவாகப் பாராட்டினார்.

Updated On: 7 Aug 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  3. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  4. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு
  5. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?
  6. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகையும் மற்ற மாநிலங்களில் கொண்டாடும் விதமும்
  7. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே கல்லறை தோட்டத்தில் சடலம் புதைக்க மக்கள் எதிர்ப்பு
  9. திருத்தணி
    காட்டுப்பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் உயிரிழப்பு
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்