/* */

நெல் களங்களில் மூட்டைகள் காத்திருப்பு.. கொள்முதல் நிலையம் திறக்கபடுமா?

சம்பா பருவ நெல்கள் தற்போது கொள்முதல் செய்ய தற்போது வரை மூன்று இடங்களில் மட்டுமே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நெல் களங்களில் மூட்டைகள் காத்திருப்பு.. கொள்முதல் நிலையம் திறக்கபடுமா?
X

காஞ்சிபுரம் அடுத்த விஷார் பகுதியில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் களத்தில் காத்திருக்கும் நெல்கள் இன்று மழையில் நனையாமல் மூடி வைத்துள்ள காட்சி.

கோயில் நகரம், விவசாய மாவட்டம் என புகழ் பெற்ற காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் சுமார் 900 ஏரிகள் உள்ள நிலையில் கடந்த பருவமழை மற்றும் திடீர் புயல் காரணமாக பல்வேறு ஏரிகள் 75 சதவீதத்திற்கு மேல் நிரம்பிய நிலையில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதனால் விவசாயிகள் சம்பா பருவத்தில் முன்கூட்டியே குறித்த நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பயிரிடத்து துவங்கி கடந்த 90 நாட்களாக பல்வேறு நிலைகளில் அதனை பராமரித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த பருவத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு மாவட்ட முழுவதும் சுமார் 62, 615 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெல் மூட்டைகள் அரசால் கொள்முதல் செய்யப்பட்டு பல கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது அனைத்து விவசாயிகளும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தற்போது சம்பா பருவத்தில் பயிரிடப்பட்ட நெல்கள் அறுவடை துவங்கி உள்ளதால், விவசாய கூட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மூன்று இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் துவக்கி வைத்தார்.

ஆனால் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் ஒன்று கூட இதுவரை திறக்கப்படாத நிலை உள்ளது. குறிப்பாக விஷார் பகுதியில் கடந்த பருவத்தில் அமைக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்ட குறிப்பிட்டதக்கது.

இக்கிராமத்தை சுற்றி உள்ள பெரும்பாக்கம் , நரப்பாக்கம், விப்பேடு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் இந்த மையத்தின் மூலம் பயன்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது இதே பகுதியில் மேல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என மக்கள் தற்போது வரை காத்திருக்கின்றனர். கடந்த ஒரு வாரங்களாக அறுவடை செய்யப்பட்டுள்ள நெல்களை இங்கு களத்தில் முன்பதிவுக்காக எடுத்து வந்து காத்திருந்து உள்ளனர்.

இந்நிலையில் மாலை திடீரென காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் கருமேகம் சூழ்ந்து மழை வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , தற்போது இந்த பகுதியில் கன மழை பெய்து வருகிறது.

இதைக் கண்ட விவசாயிகள் உடனடியாக தங்கள் நெல் மீது தார்ப்பாயும் மூலம் பாதுகாக்கும் பணிகளை மேற்கொண்டு கொண்டு வருகின்றனர்.

இதனால் இவர்களுக்கு இழப்பு ஏற்படும் முன் இப்பகுதியில் விரைவாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Updated On: 8 Aug 2023 12:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  2. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  5. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  7. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  9. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  10. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...