/* */

ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு புதுமணப்பெண் மனு தாக்கல்

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு, 15வது வார்டு உறுப்பினர் பதவிக்கு, பட்டதாரி புதுமணப்பெண் மனு தாக்கல் செய்தார்.

HIGHLIGHTS

ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு புதுமணப்பெண் மனு தாக்கல்
X

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழு, 15வது வார்டு உறுப்பினர் பதவிக்காக, வேட்புமனு தாக்கல் செய்த புது மணப்பெண் ஜெயப்பிரியா.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், கடந்த 15ஆம் தேதி துவங்கி இன்று நிறைவு பெறுகிறது. இறுதி நாளான இன்று, வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் அதிக அளவில் குவிந்தனர். காலை முதலே அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள், தங்கள் ஆதரவு பொதுமக்களுடன் ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

அவ்வகையில், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர், 15வது வார்டுக்கான வேட்புமனுவை, புது மணப்பெண்ணான, பட்டதாரி அ. ஜெயப்பிரியா தாக்கல் செய்தார். திருமணமாகி சில நாட்களேயான நிலையில், தனியாக வந்து அவர் வேட்புமனு தாக்கல் செய்து, அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

கடந்த காலங்களில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளராக, தாம் பணிபுரிந்த வந்ததாகவும், தனது தகப்பானரும் அதிமுக நிர்வாகி என்று கூறினார். இருவருக்கும் இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் சுயேச்சையாக போட்டியிடுவதாக, அவர் தெரிவித்தார்

Updated On: 22 Sep 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  2. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  4. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  5. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 173 கன அடியாக அதிகரிப்பு
  7. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்
  9. வீடியோ
    🔥உனக்கு 24-மணிநேரம்தான் Time விஜயபாஸ்கர் மிரட்டல்🔥|மோதிக்கொண்ட...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?