/* */

காஞ்சிபுரம் எம் எல் ஏ பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற விழாவில் எம் எல் ஏ எழிலரசன், பாரத பிரதமரை இழிவாக பேசியதாக பாஜக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் எம் எல் ஏ பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக
X

பிரதமரை இழிவாக பேசிய காஞ்சிபுரம் எம்எல்ஏ மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாவட்ட தலைவர் கே எஸ் பாபு தலைமையில் , எஸ் பி சுதாகரிடம் மனு அளித்த போது

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் பல்வேறு நல திட்ட பணிகளை துவக்கி வைத்து கட்டப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்தார்.

அவ்வகையில் கீழ்கதிர்பூர் பகுதியில் நியாய விலை கடை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கிய பின்பு மகளிர் உரிமைத்தொகை வரவில்லை என கூறி பெண்கள் அவரை முற்றுகையிட்டனர்.

அப்போது அதற்கு விளக்கம் அளித்த நிலையில் பாரத பிரதமரை இழிவான வார்த்தைகளாலும் மற்றும் பாஜக நிர்வாகிகளை தரம் தாழ்ந்து விமர்சித்தார்.

மேலும் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக கூறி, வருவாய்த்துறை ஊழியர்களையும் பணி நீக்கம் செய்யப்படுவீர்கள் என கண்டித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மாவட்ட தலைவர் கே எஸ் பாபு மற்றும் துணைத் தலைவர் ஜம்போடை சங்கர் தலைமையில் பாஜகவினர் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், எஸ்.பி சுதாகரை நேரில் சந்தித்து அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனக் கூறி கோரிக்கை முன்வைத்தனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் கூறுகையில், பாரதப் பிரதமரை விமர்சிக்க தகுதியற்ற எம்எல்ஏ உடனடியாக நாளைக்குள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் அவரது வீடு பாஜகவின் முற்றுகையிடப்படும் என தெரிவித்தார்.

கடந்த ஐந்து ஆண்டுகள் முன்பு தேர்தலில் போட்டியிடும் போது அவரது சொத்து மதிப்பு கூறியதற்கும் தற்போது இரண்டு ஆண்டுக்கு முன் கொடுத்த மதிப்பிற்கும் உள்ள நிலையை அவர் தெரிவிப்பாரா? என கேள்வி எழுப்பினார்.

இந்நிகழ்ச்சியில் நகர தலைவர்கள் ஜீவானந்தம் , ஞான சூரியன் , பொதுச் செயலாளர் முத்துகிருஷ்ணன், நகர துணை தலைவர் ஆறுமுகம், இளைஞரணி செந்தில்குமார் தியாகு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Updated On: 2 Nov 2023 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?