/* */

குறைதீர் கூட்டத்தில் கனரா வங்கி வணிக தொடர்பாளர்கள் கோரிக்கை மனு

கனரா வங்கியில் 10ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் வங்கி தொடர்பாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்

HIGHLIGHTS

குறைதீர்  கூட்டத்தில் கனரா வங்கி வணிக தொடர்பாளர்கள்  கோரிக்கை மனு
X

வங்கி தொடர்பாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கும் கனரா வங்கியில் கடந்த பத்து ஆண்டுகளாக 26 வணிக தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டு மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் வங்கி மூலம் வழங்கப்படும் நல்ல திட்டங்களை மக்களின் விருப்பத்திற்கு சென்று வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் முதியோர் உதவித்தொகை, ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் அரசின் அனைத்து திட்டங்களின் வங்கி சேவைகளை சிறு கிராமங்களுக்கும் சென்று அனைவரும் பயன்பெறும் வகையிலும் வங்கிக்கு பாலமாக செயல்பட்டு வருகின்றனர் ‌‌

இதுமட்டுமில்லாமல் புதிய வங்கி கணக்கு துவங்குதல், பணம் செலுத்துதல், பணம் பெறுதல், சிறு குழு கடன் பெற்றுத் தருதல், விவசாய கடன் பெறுதல் ஆகிய பணிகளையும் மாநில அரசுக்கு உறுதுணையாக பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியம் மற்றும் கமிஷன் தொகை ஆகியவை தற்போது குறைத்து வழங்கப்பட்டு வருவதாகவும் , முதலில் இதற்கு பயன்படும் இயந்திரத்திற்கு கட்டிய பணம் திருப்பி என அறிவித்த நிலையில் தற்போது அதை தர இயலாது என தெரிவித்துள்ளனர்.

இவர்களுக்கு வழங்கப்படும் சேவை கட்டணத்தை அதிகப்படுத்தவும் பேரிடர் காலங்களில் செயல்பட்டதால் முன் களப்பணியாளர்கள் அறிவிக்க வேண்டும் எனவும் அடிப்படை ஊதியத்தை 10 ஆயிரமாக வழங்க வேண்டும் பரிவர்த்தனை கமிஷனை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் முகாமில் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

Updated On: 27 Dec 2021 7:15 AM GMT

Related News