/* */

துப்புரவு பணியாளர் வருகை பதிவேடு - மேயர் திடீர் ஆய்வு

காஞ்சிபுரம் மாநகராட்சி 2 வது மண்டலத்தில் துப்புரவு பணியாளர் வருகை பதிவேட்டைமேயர் மகாலட்சுமி யுவராஜ் திடீர்ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

துப்புரவு பணியாளர் வருகை பதிவேடு -  மேயர் திடீர் ஆய்வு
X

காஞ்சிபுரம் மாநகராட்சி இரண்டாவது மண்டல பகுதியில் அதிகாலை துப்புரவு பணியாளர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்து பணியாளரிடம் பேசிய மேயர் மகாலட்சுமி யுவராஜ்.

காஞ்சிபுரம் மாநகராட்சியின் இரண்டாவது மண்டலமான சின்ன காஞ்சிபுரம் பகுதியில் மேயர் மகாலெட்சுமியுவராஜ் இன்று அதிகாலை திடீரென ஆய்வு மேற்கொண்டு துப்புரவு பணியாளர் வருகை பதிவேட்டை ஊழியர்களின் முன்னிலை யில் சரி பார்த்தார்.மேலும் துப்புரவு பணியாளர்களின் வருகை பதிவேடு குறித்து ஏதேனும் குறைகள் உள்ளதா என கேட்டறிந்தார்.

காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளை உள்ளடக்கி 4 மண்டலம் பிரிக்கப்பட்டு பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் , சாலை வசதி, குப்பை கழிவுகளை கையாளுதல் என பல்வேறு பணிகளை நாள்தோறும் கையாண்டு வருகிறது. மேலும் காஞ்சிபுரம் மாநகராட்சியில் நாள்தோறும் பல லட்சம் தன் எடையுள்ள குப்பைகள் பெறப்படுகிறது கடந்த சில வருடங்களாக பொதுமக்களுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தினை விழிப்புணர்வு ஏற்படுத்தி நாள்தோறும் வீடுகளிலே குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத என தரம் பிரிக்கப்பட்டு துப்புரவு பணியாளருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் சாலை தெருக்களில் வைக்கப்பட்டிருந்த குப்பை தொட்டிகளை அகற்றி பொதுமக்களிடமே மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் நேரடியாக சென்று வீடுகளில் குப்பைகளை பெற்று வருகின்றனர்.இதனை திருக்காளிமேடு பகுதியில் கொண்டு சென்று மீண்டும் சரிபார்க்கப்பட்டு திடக்கழிவு மேலாண்மை திட்டம் கையாளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாநகராட்சி மன்ற சாதாரண கூட்டம் மேயர் மகாலட்சுமியுவராஜ் மற்றும் துணை மேயர் குமர குருநாதன் தலைமையில் நடைபெற்றது.இதில் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட உள்ள 97 திட்டங்கள் குறித்த தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு 51 மாம் என்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இதன் பின் மாமன்ற உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார் மேயர் மகாலட்சுமி யுவராஜ்.

இதில் மாமன்ற உறுப்பினர் கயல்விழி சூசை கூறுகையில், தனது வார்டில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களின் வருகை பதிவேட்டில் முறைகேடு நடைபெறுகிறது எனவும் இதனை முறையாக ஆய்வு செய்து உரிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும் பல ஊழியர்கள் பணிக்கு வந்தாலும் விடுமுறை எனவும் விடுமுறை எடுத்துள்ள ஊழியருக்கு பணி செய்ததாகவும் கூறி வருகை பதிவேட்டில் முறைகேடாக அவர்கள் ஊதியம் களவாடப்பட்டு வருவதாகவும் புகார் தெரிவித்தார் இதுகுறித்து பதில் அளித்த மேயர் மகாலட்சுமியுவராஜ், காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களின் வருகை பதிவேடுகள் முறையாக ஆய்வு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

அவ்வகையில் இன்று அதிகாலை காஞ்சிபுரம் மாநகராட்சியின் இரண்டாவது மண்டலமான சின்ன காஞ்சிபுரம் பகுதியில் திடீரென ஆய்வு மேற்கொண்டு துப்புரவு பணியாளர் வருகை பதிவேட்டை ஊழியர்களின் முன்னிலையில் சரி பார்த்தார்.மேலும் துப்புரவு பணியாளர்களின் வருகை பதிவேடு குறித்து ஏதேனும் குறைகள் உள்ளதா என கேட்டறிந்தார்.



காஞ்சிபுரம் மாநகராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளர்களாக 400 நபர்களுக்கு மேல் பணிபுரியும் நிலையில் அவர்களது மாத ஊதியத்தில் இருந்து ரூபாய் ஆயிரம் வரை பிடித்தம் செய்வதாக துப்புரவு ஆய்வாளர்கள் மீது நீண்ட காலமாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

ஆனால் துப்புரவு பணியாளர்கள் எழுத்துப்பூர்வமாக எந்தவிதமான புகார்களையும் சம்பந்தப்பட்டவர்கள் மீது மாநகராட்சி அலுவலகத்தில் அளிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வருகை பதிவேட்டை ஆய்வு செய்த மேயர் மகாலட்சுமி யுவராஜ் செயலை வரவேற்ற நிலையில், இது தொடர்பாகவும் விசாரணை நடத்தி குறைந்த ஊதியத்தில் பணி புரியும் இவர்களுக்கு முழு தொகையும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுமா என துப்புரவு பணியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Updated On: 28 March 2023 3:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  3. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  5. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  6. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  7. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  8. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  10. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...