/* */

ஆக்ஸிஜன் வழங்காமல் 2 நோயாளிகள் இறந்ததாக குற்றச்சாட்டு

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சரியாக ஆக்சிஜன் வழங்கப்படாததால் 2 நோயாளிகள் இறந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

HIGHLIGHTS

ஆக்ஸிஜன் வழங்காமல் 2 நோயாளிகள் இறந்ததாக குற்றச்சாட்டு
X

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு பைல் படம்.

காஞ்சிபுரம் அருகே நத்தப்பேட்டை அடுத்த நசரத்பேட்டை பகுதியில் வசிப்பவர் கலாநிதி. இவர் காஞ்சிபுரம் அருகே அரசு புற்றுநோய் மருத்துவமனையில் உதவி செவிலியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். அவருக்கு வயது 64. இவருக்கு சுவாசக் கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த வாரம் அவருக்கு காச நோய் இருந்ததாக மருத்துவமனையில் கண்டறியப்பட்டது அங்கு சிகிச்சை பெற்று வந்த இவர் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த வாரம் சனிக்கிழமை அன்று அனுமதிக்கப்பட்டடார்.

அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற அவர் பின்னர் ஐ எம் சி பிரிவுக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார்..இந்நிலையில் நேற்று மதியம் தனது பேரன் கார்த்திக்கிடம் உணவு வாங்கி வர கலாநிதி கூறினார். அதன் பெயரில் உணவு வாங்க செல்லும்பொழுது கலாநிதிக்கு 12 அளவு ஆக்சிஜன் காண்பித்தது.அதனால் அவர் உணவு வாங்க சென்றார் .திரும்பி வந்து பார்த்த பொழுது ஆக்ஸிஜன் அளவு இரண்டாக குறைந்ததின் காரணமாக அதிர்ச்சியுற்றார்.

உடனே ரெகுலேட்டர் மூலமாக அளவை கூட்ட முயற்சித்த போது அதிகப்படுத்த முடியவில்லை. உடனே செவிலியரை அழைத்து ஆக்சிஜன் அளவு குறைந்துவிட்டது அதேபோல் சுவாச அளவும் 100 லிருந்து 87 ஆக குறைந்துவிட்டது என புகார் தெரிவித்தார்.

செவிலியர் சுந்தரமூர்த்தி இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கலாநிதியிடம் எந்தவித அசைவும் இல்லாததால் கார்த்திக் அதிர்ச்சியுற்று மீண்டும் மீண்டும் செவிலியரை வலியுறுத்தியுள்ளார்.

ஆக்ஸிஜன் அளவை 12 லிருந்து இரண்டாக குறைந்து விட்டதை குறிப்பிட்டு வலியுறுத்தி கூறினார். அதன் பேரில் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அந்த வார்டில் இருந்த மற்ற நோயாளிகளுக்கு சென்ட்ரலைஸ் மூலம் வருகின்ற ஆக்சிஜனை சோதனை செய்து பார்த்தனர் .

இதில் கசிவு ஏற்பட்டு நான்கு படுகைகளிலும் ஆக்ஸிஜன் இரண்டு அளவு தான் வருகின்றது என கண்டறிந்தனர். பின்னர் மீண்டும் கலாநிதியிடம் வந்து சோதனை செய்து பார்த்ததில் சுவாச அளவு மிகவும் குறைந்து விட்டது காணப்பட்டது. மருத்துவர்கள் அதிகப்படுத்த முயற்சி செய்தனர் சிகிச்சை பலனின்றி கலாநிதி இறந்து விட்டார்.

கார்த்திக் கலாநிதியின் மகன்களை வர வைத்து அங்கு நடந்த சம்பவத்தை விளக்கினார் .அதனால் மகன்கள் மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். என்னுடைய அம்மாவுக்கு தேவையான ஆக்சிஜனை அளிக்காமல் அலட்சிய போக்கில் செயல்பட்டதால் என்னுடைய அம்மாவை கொன்று விட்டீர்கள் என கதறி அழுத்தனர் .

மருத்துவ அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்து ஆக்ஸிஜன் முழுமையாக செல்லாவிடில் பல நோயாளிகளுக்கு பிரச்சனை ஏற்பட்டிருக்குமே. அப்படி இருக்கும் பொழுது இந்த நான்கு படுக்கையில் உள்ள நோயாளிகளுக்கு மட்டும் எப்படி அளவு குறைவாக காணப்பட்டது என எதிர் கேள்வி எழுப்பினர். மேலும் நீங்கள் இதுகுறித்து பிரச்சினை எழுப்பினால் உங்களுடைய அம்மாவின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்து தான் அனுப்ப முடியும் என தெரிவித்ததால் கலாநிதியின் மகன்கள் தனது தாயாரின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்யாமல் எடுத்து செல்வதாக கூறினார்.

அதேபோல் கலாநிதி இறப்பதற்கு முன்னதாக பூசிவாக்கத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற மற்றொரு 70 வயது நோயாளியும் இறந்துவிட்டார். காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஒரு மணி நேர இடைவெளியில் இரண்டு நோயாளிகள் சரியான ஆக்சிஜன் அளவு கிடைக்காமல் உயிர் இழந்தது மருத்துவமனையில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

Updated On: 19 Oct 2022 5:59 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...