/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தீவிரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும் இடங்கள் என 78 கண்டறியப்பட்டு மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தீவிரம்
X

காஞ்சிபுரத்தில் வேகவதி ஆற்றில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகளின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது தண்ணீர் தங்கு தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை காலங்களில் ஏற்படும் நிலைமைகளை தடுக்கும் வகையில் முன்னேற்பாடு பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 78 இடங்கள் வெள்ளம் பாதிக்கும் பகுதிகள் என கண்டறியப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2015ல் ஏற்பட்ட கன மழை காரணமாக குடியிருப்புகள் சேதமடைந்து பொதுமக்கள் பெரிதும் இன்னலுக்கு உள்ளாகினர். மேலும் மனித உயிரிழப்புகள் , கால்நடைகளும் , நீர் நிலைகளில் சிக்கி உயிரிழந்தன. இந்த நிலையை கருத்தில் கொண்டு அதன்படி பின்வரும் காலங்களில் இது போன்று நடக்கக்கூடாது என பேரிடர் மேலாண்மை அமைப்பு உருவாக்கி அதன்படி பருவமழை காலங்களில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு பருவமழை துவங்கும் முன்பு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்த்தி தலைமையில் பல கட்ட கூட்டங்கள் நடைபெற்று 11 துறைகளை ஒருங்கிணைந்து 21 மண்டல குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டு 24 மணி நேரமும் தயாராக இருக்கும் நிலையில் குழு உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குன்றத்தூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில், குறிப்பாக வரதராஜபுரம் பகுதியில் பேரிடர் ஒத்திகை நடத்தப்பட்டது.

இதேபோல் ஐந்து தாலுகாக்களிலும் பேரிடர் மேலாண்மை குழு சார்பில் பேரிடர் ஒத்திகை நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இது மட்டுமில்லாமல் பேரிடர் கட்டுப்பாட்டு அறை காஞ்சிபுரம் மாவட்டத்தில் துவங்கப்பட்டு பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள வேகவதி ஆற்றங்கரை ஓரம் அதிக குடியிருப்புகள் உள்ளதால் வேகவதி ஆற்றை சுத்தப்படுத்தி வெள்ளை நீர் தங்கு தடை இன்றி செல்ல பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுபோன்று பல்வேறு பகுதிகளில் மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழைக்கான முன்னேற்பாடுகள் துவங்கி நடைபெற்று வருகிறது. ரூ. 6.5 கோடி மதிப்பில் வடகிழக்கு பருவ மழைக்கான முன்னேற்பாடுகள் திட்டங்கள் வகுக்கப்பட்டு , அந்தந்த பகுதியில் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதும், இது குறித்த ஆய்வுக்கூட்டங்கள் மாவட்ட ஆட்சித் தலைமையில் வாரந்தோறும் நடைபெற்று வருவதாகவும் அதில் நடைபெற்ற பணிகள் குறித்தும் , இனி நடக்கவுள்ள பணிகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிக அதிக பாதிப்பு உள்ள இடங்கள் என ஐந்து கண்டறியப்பட்டுள்ளது, அதிக பாதிப்பு உள்ள இடங்கள் இருபது , மிதமான பாதிப்பு உள்ள இடம் 34 , குறைவான பாதிப்பு உள்ள இடங்கள் 19 என மொத்தம் 78 இடங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பேரிடர் காலங்களில் முதல் தகவல்களை அளிக்கவும் பொது மக்களை காப்பாற்றவும் காஞ்சிபுரம் மாவட்ட பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வட்டாட்சியர் தாண்டவமூர்த்தி தலைமையில் 5 ஒன்றியங்களிலும் 400 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Updated On: 5 Oct 2022 11:15 AM GMT

Related News