/* */

போதை பொருட்களை கட்டுப்படுத்த தவறிய திமுகவை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

இளம் தலைமுறை சீரழிக்கும் போதை பொருட்களின் மாநிலமாக தமிழகத்தை திமுக அரசு உருவாக்கியுள்ளது என குற்றச்சாட்டு.

HIGHLIGHTS

போதை பொருட்களை கட்டுப்படுத்த தவறிய திமுகவை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்
X

தமிழகத்தில் போதை பொருட்கள் அதிகளவில் புழங்குவதாக கூறி அதை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழகம் போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறி, வருங்கால தலைமுறை வாழ்க்கையை சீரழித்து வருவதை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, மாணவரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

திமுக அரசு பதவி ஏற்ற நாள் முதல் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கேடு அடைந்துள்ளதாகவும் தமிழகம் போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறி வருவதும் இதனால் இளைய தலைமுறை வாழ்க்கை சீரழிந்து பெற்றோர்கள் கவலை அடையும் நிலையில் போதை பொருட்கள் கடத்தலால் தமிழ்நாட்டிற்கு இந்திய அளவில் தலைகுனிவு ஏற்பட்டுள்ளதை கண்டித்து அதிமுக இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை மற்றும் மாணவர் அணி சார்பில் காஞ்சிபுரம் காவலன் கேட் பகுதியில் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வாலாஜாபாக் கணேசன் மைதிலி திருநாவுக்கரசு, மதனந்தபுரம் பழனி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட மாவட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


போதை பொருட்களின் நடமாட்டம் கொக்கு கிராமங்களிலும் அதிக அளவில் இருப்பதால் இளைஞர்கள் பள்ளி கல்லூரி மாணவர்களும் சீரழியும் நிலையை கண்டித்து இதை தடுக்க தவறிய திமுக அரசை அகற்ற அனைவரும் பாடுபட வேண்டும் என கூறி கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் 1000க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

மேலும் வரும் காலங்களில் இதை தடுக்க தவறினால் அதிமுக தலைமை கழக அறிவுரையின்படி போராட்டங்கள் வலுப்பெறும் என முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் தெரிவித்தார்.

Updated On: 4 March 2024 10:15 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோட்டில் வணிகர் சங்க புதிய கிளை திறப்பு
  2. உலகம்
    ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் உக்ரைனின் ஜெலென்ஸ்கி சந்திப்பு
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் நடந்த 4 கொலை, கொள்ளை வழக்குகள் தொடர்பாக 16 பேர் கைது
  4. பரமக்குடி
    ராமநாதபுரத்தில் மஞ்சு விரட்டு: திரண்டு ரசித்த கிராம மக்கள்..!
  5. கல்வி
    பறக்கும் இறக்கையில்லா பிராணிகள்..! படைப்பின் விசித்திரம்..!
  6. ஈரோடு
    நோயாளிகள் மருத்துவர்களின் வாடிக்கையாளர்கள் அல்ல: ஐஎம்ஏ தேசிய தலைவர்...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஜமாபந்தியில் 5 நபர்களுக்கு உடனடி பட்டா
  8. ஈரோடு
    மோடி அரசு இன்னும் 5 மாதத்தில் கலைந்து விடும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்...
  9. ஆரணி
    ஆரணி அருகே ஸ்ரீமணி கண்டீஸ்வரா் கோயிலில் உண்டியல் உடைத்து திருட்டு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்