/* */

காஞ்சிபுரம் : நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய திட்டம் அமல்

காஞ்சிபுரம் நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய திட்டத்தை கலெக்டர், போலீஸ் எஸ்பி அமல்படுத்து உள்ளனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் :  நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய திட்டம் அமல்
X

பைல் படம்

காஞ்சிபுரம் நகரத்தில் புகழ்பெற்ற கோவில்கள் மற்றும் பட்டு ஜவுளி கடைகள் அமைந்துள்ளதால் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து அதிகப்படியான பொதுமக்கள் காஞ்சிபுரம் நகருக்கு வருகை புரிகின்றனர்

இதுமட்டுமில்லாமல் காஞ்சிபுரம் மாவட்டத்தை சுற்றி பல்வேறு தொழில் பூங்காக்கள் மற்றும் குவாரிகள் அமைந்துள்ளதால் கனரக வாகனங்கள் அனைத்தும் காஞ்சிபுரம் வந்து செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் அவ்வப்போது ஏற்படுகிறது.

மேலும் பள்ளி நேரங்களில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பேருந்துகள் பேருந்து நெரிசலில் சிக்கி தவிப்பதாக தொடர்புகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 20க்கும் மேற்பட்ட அனைத்து துறை அலுவலர்கள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஒப்புதலுடன் மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதில் அனைத்து வித கனரக வாகனங்கள் தொழிற்சாலை பேருந்துகள் சரக்குகள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை காஞ்சி நகருக்குள் வர அனுமதிப்பதில்லை .

நகரின் நான்கு பகுதிகளிலும் புறவழிச்சாலை அமைந்துள்ளதால் தொழிற்சாலை பேருந்துகள் , கனரக வாகனங்கள் இதனை பயன்படுத்த அறிவுறுத்தப்படும்.

தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வசதியாக பெரியார் நகர் , ஓரிக்கை , செவிலிமேடு, கீழம்பி, பொன்னேரியில் கரை ஆகிய இடங்களில் தொழிலாளர்களை ஏற்றி , இறக்கும் வகையிலும், அந்தப் பகுதிகளில் இருசக்கர வாகன நிறுத்த வசதிகளை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றங்கள் குறித்து தொழிற்சாலை மனிதவள மேம்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவும், இது குறித்த விளக்கக் கூட்டங்களை நடத்த சிப்காட் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் காஞ்சிபுரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் அந்த எல்லைக்கு உட்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் இந்த நடைமுறையை செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Updated On: 17 Dec 2021 5:22 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  2. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  6. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  10. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...