/* */

லோக் அதாலத் நிகழ்வில் 375 வழக்குகளுக்கு தீர்வு

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்ச்சியில் ரூ3.91 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது..

HIGHLIGHTS

லோக் அதாலத் நிகழ்வில் 375 வழக்குகளுக்கு தீர்வு
X

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்வில் சமரசத் தீர்வு ஏற்பட்டு அதற்கான இழப்பீட்டுத் தொகையை நீதிபதி செம்மல் வழங்க பெற்றுக் கொண்ட பயனாளர்.

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரிலும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படி காஞ்சிபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியும் ஆன திருமதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இன்று காலை காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நிகழ்வினை மாவட்ட நீதிபதி செம்மல் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் தொழிலாளர் நீதிமன்ற மாவட்ட நீதிபதி பி சிவஞானம் முதன்மை சார்பு நீதிபதியும் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவருமான நீதிபதி திரு அருண்சபாபதி, கூடுதல் சார்பு நீதிபதி திருஞானசம்பந்தம் , மாவட்ட உரிமையியல் நீதிபதி திருமதி ராஜேஸ்வரி , நீதித்துறை நடுவர் இனியகருணாகரன் , காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் எண் 2 திரு.வாசுதேவன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் மோட்டார் வாகன விபத்து , அசல் வழக்கு , வங்கி வாரா கடன் வழக்கு, காசோலை வழக்கு , நில ஆர்ஜித வழக்கு , குடும்ப நல வழக்கு மற்றும் தொழிலாளர் நல வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டது.

பல்வேறு அமர்வுகளில் வழக்குகள் இரு தரப்பினரும் வரவழைக்கப்பட்டு நீதிபதிகள் முன்னிலையில் சமரசத் தீர்வு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 375 வழக்குகள் கையாளப்பட்டு அதற்கான தீர்வு வழங்கப்பட்டு இழப்பீடு துணையாக பயனாளிகளுக்கு 3 கோடியே 91 லட்சத்து 28 ஆயிரத்து 320 ரூபாய் காண காசோலைகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியினை வட்டச சட்டப் பணிகள் குழு முதுநிலை நிர்வாக உதவியாளர் சத்தீஸ்ராஜா ஏற்பாடு செய்தார்.

Updated On: 9 Sep 2023 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?