/* */

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலின் கணக்கில் 271 ஏக்கர் நிலம் மாயம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 271 ஏக்கர் நிலம் கணக்கில் மாயமாகியுள்ளதாக தகவல் உரிமை சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலின் கணக்கில் 271 ஏக்கர் நிலம் மாயம்
X

வரதராஜ பெருமாள் கோவில்.

காஞ்சிபுரம் ராயன் குட்டைமேட்டு தெருவை சேர்ந்த டில்லிபாபு என்பவர், தகவல் உரிமை சட்டத்தில் கடந்த 2019 மே மாதம் அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலுக்கு வருவாய் ஆவணங்களின் படி எத்தனை ஏக்கர் நிலங்கள் உள்ளது? அதன் மதிப்பு என்ன? என்பது குறித்து தகவல் உரிமை சட்டத்தில் கோரியிருந்தார். இதற்கு திருக்கோயில் பொது தகவல் அலுவலர் சார்பில் 448.43 ஏக்கர் நிலப்பரப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தகவல் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட இரு வேறு முரண்பட்ட தகவல்கள்.

இந்நிலையில் மேற்கூறிய தகவல்கள் பொய்யானவை என கருதி, மீண்டும் 2021 ஆகஸ்ட்16 ம் தேதி தகவல் உரிமை சட்டத்தில் அதே கேள்வியை கேட்டு பதில் கூற அவர் மனு அளித்தார். இதற்கு பதிலளித்த அலுவலர்கள் 177.20 ஏக்கர் நிலம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த டில்லிபாபு, இரு வருடங்களுக்குள்ளேயே சுமார் 271 ஏக்கர் நிலம் குறைவாக உள்ளது. ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கிய வரதராஜபெருமாள் திருக்கோயில் தற்போது நில விவகாரத்தில் நிலம் மாயமானது எப்படி என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறைந்தபட்சம் நில வழிகாட்டி மதிப்பின்படி பார்த்தால் கூட பல கோடி மதிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தகவலை மேற்கொண்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் இது குறித்து ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

Updated On: 14 Sep 2021 6:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?