/* */

காஞ்சிபுரம், விழுதுகள் தொண்டு நிறுவனத்தின் 13வது ஆண்டு துவக்க விழாவில் ரத்ததான முகாம் ஏற்பாடு...!

விழுதுகள் தொண்டு நிறுவனத்தின் 13வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு காஞ்சி மாநகர துணை மேயர் தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம், விழுதுகள் தொண்டு நிறுவனத்தின் 13வது ஆண்டு துவக்க விழாவில் ரத்ததான முகாம் ஏற்பாடு...!
X

காஞ்சி விழுதுகள் தொண்டு நிறுவனத்தின் 13வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ரத்ததான முகாம்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது விழுதுகள் தொண்டு அமைப்பு. இந்த அமைப்பின் சார்பாக அன்னசத்திரம் என்னும் பெயரில் கடந்த 2ஆண்டுகளாக ஏழை, எளிய மக்களுக்கு 3வேளையும் உணவு வழங்கி வருகின்றனர்.

விழுதுகள் அமைப்பு தொடங்கி இன்று 13வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, ரத்ததானம் முகாம் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையுடன் இணைந்து அண்ணா அரங்க வளாகத்தில் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மோகன் தலைமையில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக துணை மேயர் குமரகுருநாதன் கலந்து கொண்டு, 12 ஆண்டுகளாக ஏழை எளிய மக்களுக்கு உணவு அளித்து புகழுடன் விளங்கி வருவது போல, விழுதுகள் அமைப்பு மேலும் வரும் ஆண்டுகளிலும் சமூக சேவைகளில் அதிகளவு ஈடுபட்டு மக்கள் இதயங்களில் இடம்பெற வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து ரத்ததான முகாமில் 30க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் அளித்தனர். கொடையாளிகளை பாராட்டும் விதமாக அரசு மருத்துவமனை சார்பில் நற்சான்றிதழை குருதி கொடையாளர்களுக்கு துணை மேயர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் அளவூர் நாகராஜன், நகர காங்கிரஸ் செயலாளர் நாதன் மற்றும் விழுதுகள் அமைப்பு நிர்வாகி வெங்கடாசலம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Updated On: 19 Jun 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  2. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  3. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  4. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  6. சேலம்
    மேட்டூர் அணை நீர்மட்டம் 50.78 அடியாக சரிவு..!
  7. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  8. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  9. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி
  10. லைஃப்ஸ்டைல்
    நான் வணங்கும் அன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து..!