/* */

சுங்கசாவடிகளில் வாக்குவாதம் வேண்டாம்- காவல்துறை

சுங்கசாவடிகளில் வாக்குவாதம் வேண்டாம்-  காவல்துறை
X

சுங்கசாவடிகளில் தேவையற்ற வீண் வாதங்கள் செய்ய வேண்டாம் என வாகனஓட்டிகளுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் சுங்க சாவடிகளில் மிண்ணணு கட்டணம் செலுத்தும் முறையினை( FasTag ) பலகட்ட நிகழ்வுகளுக்கு பின் அனைத்து சுங்க சாவடிகளிலும் அமல்படுத்தியுள்ளது.பாஸ்டேக் முறையில் செலுத்த முடியாதவர்கள் இரட்டிப்பு கட்டணம் கட்டவேண்டும் என கடும் நிபந்தனையுடன் துவங்கிய நிலையில் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இது குறித்து பல்வேறு வாக்குவாதங்கள் நடைபெற்று வருகிறது.இதனைத்தவிர்க்கும் வகையில் சுங்க சாவடிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை சார்பாக வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

அரசு விதிகளுக்கு உட்பட்டு சுங்க சாவடிகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து இனிய பயணம் மேற்கொள்ள வேண்டும் எனவும் இதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்காத வண்ணம் செயல்பட காவல்துறையினர் சில வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.சுங்கச்சாவடிகளில் சில வாக்குவாதங்கள் தவிர 90 சதவீத வாகன ஓட்டிகள் பாஸ்டேக் முறையில் கட்டணம் செலுத்தி பயணிக்கின்றனர்.

Updated On: 16 Feb 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு