/* */

அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்: கள்ளக்குறிச்சி கலெக்டர்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைவருக்கும் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

HIGHLIGHTS

அனைவருக்கும்  கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்: கள்ளக்குறிச்சி கலெக்டர்
X

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பூசி பணிகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், அனைத்து கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்ட பரவலை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் பணி மாவட்டத்திலுள்ள 45 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனைகள் கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனை சிறப்பு முகாம்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்கள் வாயிலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிறப்பு முகாம்கள் வாயிலாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது 01.09 .2021 அன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்கள் உட்பட அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல் தவணை 3,77,429 இரண்டாம் தவணை 69,354 என மொத்தம் இதுவரை 4,46,783 தவணை செலுத்த பட்டுள்ளன. மாவட்டங்களில் தகுதியுள்ள அனைநத்து நபர்களும் விரைவில் முழுமையாக 100% கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்படும். கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு கோவிட்ஷில்டு 9,980யும் கோவக்சின் 4,400யும் போதிய தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. எனவே முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் இதுவரை தடுப்பூசி செலுத்த கொள்ளாதவர்கள் முதல் தவணைத் தடுப்பூசியும் செலுத்தி கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Updated On: 30 Aug 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்