/* */

மாநில கராத்தே போட்டி: கள்ளக்குறிச்சி ஜே.எஸ் பள்ளி மாணவர் வெற்றி

மாநில கராத்தே போட்டியில், கள்ளக்குறிச்சி ஜே.எஸ் பள்ளியை சேர்ந்த மாணவர் வெற்றி பெற்றார்.

HIGHLIGHTS

மாநில கராத்தே போட்டி: கள்ளக்குறிச்சி ஜே.எஸ் பள்ளி மாணவர் வெற்றி
X

கள்ளக்குறிச்சி ஜே.எஸ், குளோபல் பள்ளியில் 4ம் வகுப்பு மாணவர் பழனியரசன், மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்றார்.

சேலம் ஜே.எம்.ஜே., கிராண்ட் ஹாலில், 8 முதல் 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான, மாநில அளவிலான கராத்தே போட்டி, கடந்த 14ம் தேதி நடந்தது. இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 248 பேர் பங்கேற்றனர்.

இதில் 9 -10 வயது மாணவர்களுக்கான பிரிவில், கள்ளக்குறிச்சி ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் 4ம் வகுப்பு பயிலும் மாணவர் பழனியரசன் இரண்டாமிடம் பிடித்து வெற்றி பெற்றார். இதன் மூலம் சென்னையில் நடைபெறும் அடுத்த கட்ட, மாநில அளவிலான கராத்தே போட்டியில் பங்குபெற தகுதி பெற்றுள்ளார்.

இதையொட்டி ஜே.எஸ். பள்ளி நிறுவனர் செந்தில்குமார், தாளாளர் ஜனனிசெந்தில்குமார், தலைமை ஆசிரியர் ஜெயலஷ்மி, கராத்தே பயிற்றுநர் குமரேசன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர் பழனியரசனை பாராட்டி சான்றிதழ், கோப்பை வழங்கினர்.

Updated On: 22 Nov 2021 12:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  4. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்
  5. ஆன்மீகம்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 203 கன அடி
  7. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  8. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  9. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  10. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்