/* */

விஜயகாந்த் பிறந்த நாள் விழா: ஈரோட்டில் கேக் வெட்டி கொண்டாட்டம்

ஈரோட்டில் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி, கோவில்களில் சிறப்பு பூஜை செய்தும், கேக் வெட்டியும் கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

விஜயகாந்த் பிறந்த நாள் விழா: ஈரோட்டில் கேக் வெட்டி  கொண்டாட்டம்
X

விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி, கோவில்களில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பொங்கல் வழங்கப்பட்டது.

ஈரோட்டில் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி, கோவில்களில் சிறப்பு பூஜை செய்தும், கேக் வெட்டியும் கொண்டாடப்பட்டது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழாவையொட்டி, ஈரோடு மாநகர மாவட்ட தேமுதிக சார்பில், ஈரோடு கோட்டை பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பொங்கல் வழங்கப்பட்டது.

இதன்பிறகு, ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றி கேக் வெட்டுப்பட்டு தொண்டர்களுக்கும் பொது மக்களுக்கும் வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது. சம்பத் நகரில் 6க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சி கொடியேற்றி கேக் வெட்டப்பட்டது. தொடர்ந்து, ஈரோடு செங்கோடம்பாளையத்தில் உள்ள மன வளர்ச்சி குன்றிய பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் அரிசி பருப்பு மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.


இதனைத் தொடர்ந்து, மரப்பாலத்தில் உள்ள கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. ஈரோடு ஆர்என்புதூர் ராயர் பாளையத்தில் உள்ள காதுகேளாதோர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மதியம் அசைவ சாப்பாடு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஈரோடு மூலப்பாளையத்தில் கட்சி கொடியேற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும், ஈரோடு ஒன்றியம் சூரம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளிலும் கட்சி கொடி ஏற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சிகளுக்கு ஈரோடு மாநகர மாவட்ட தேமுதிக செயலாளர் ஆனந்த் தலைமை தாங்கினார். அவை தலைவர் ரங்கராஜன், மாவட்ட பொருளாளர் பாலாஜி, மாவட்ட துணை செயலாளர்கள் சஞ்சய் குமார், பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆனந்த், தமிழ்ச்செல்வன், மாவட்ட நிர்வாகி வேல்முருகன், பகுதி செயலாளர்கள் சூரியம்பாளையம் பச்சமுத்து, அக்ரஹாரம் பெருமாள், வீரப்பன்சத்திரம் சிலம்பரசன் சம்பத் நகர் சரவணன், திண்டல் மணிகண்டன், சூரம்பட்டி சுரேஷ், நால்ரோடு சண்முகவேல், மரப்பாலம் சுப்பிரமணி, கருங்கல்பாளையம் ஆறுமுகம், காசிபாளையம் முருகேசன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Aug 2023 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு