/* */

ஈரோட்டில் பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் பாதிப்பு குறித்த கருத்தரங்கு

ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் பாதிப்பு குறித்து கருத்தரங்கு நடைபெற்றது.

HIGHLIGHTS

ஈரோட்டில் பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் பாதிப்பு குறித்த கருத்தரங்கு
X

பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் பாதிப்பு குறித்து கருத்தரங்கு நடைபெற்றது.

ஈரோடு அடுத்த திண்டலில் உள்ள தனியார் கல்லூரியின் சுற்றுச்சூழல் மன்றம் ஈரோடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் கொங்கு மண்டலம் இந்திய இளைஞர் விடுதலை சங்கம் ஆகிய வற்றின் சார்பில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்ப்பு மற்றும் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது .

ஈரோடு திண்டலில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரி கலையரங்கில் நடந்த இந்த கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் மல்லிகா வரவேற்று பேசினார். கொங்கு மண்டல இந்திய இளைஞர் விடுதிகள் சங்க தலைவர் ஐயப்பன், செயலாளர் ராஜா ஈரோடு இலஞ்சி சமூக நல இயக்க நிறுவனர் ஜானகி சுப்பிரமணி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மோகன் உதவி அதிகாரி செல்வ கணபதி, கல்லூரி தாளாளர் சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்ப்பது குறித்து விளக்கி பேசினார்கள் .

இந்த நிகழ்ச்சியில் காலநிலை மாற்றம் மற்றும் உணவு பாதுகாப்பு பேராசிரியர் மற்றும் பன்னாட்டு ஆராய்ச்சியாளர் இளங்கோவன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கருத்தரங்கில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழி பொருட்களை பயன்படுத்துவதினால் ஏற்படும் தீமைகள் பற்றியும் ஏன் மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் வீடியோ மூலம் மாணவ மாணவிகளுக்கு விளக்கி கூறப்பட்டது. முடிவில் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் தமிழரசி நன்றி கூறினார்.

Updated On: 28 May 2023 2:50 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  3. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  4. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...