/* */

ஈரோட்டில் குடியரசு தின விழா: கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேசிய கொடியேற்றி மரியாதை

ஈரோட்டில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

HIGHLIGHTS

ஈரோட்டில் குடியரசு தின விழா: கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேசிய கொடியேற்றி மரியாதை
X

74-வது குடியரசு தின விழாவில் தேசிய கொடியினை ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி ஏற்றி வைத்தார். (அடுத்த படம்)கூடுதல் ஆட்சியர் மதுபாலனுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

ஈரோடு மாவட்டம், வ.உ.சிதம்பரனார் பூங்கா விளையாட்டு மைதானத்தில் இன்று (26.01.2023) நடைபெற்ற 74-வது குடியரசு தின விழாவில், கலெக்டர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தேசிய கொடியினை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டு, 53 காவலர்களுக்கு முதலமைச்சரின் காவலர் பதக்கங்கள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைகளை சார்ந்த 485 அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கினார்.


இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் காவல் துறையினரின் அணிவகுப்பினை பார்வையிட்டு அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டார். பின்னர், சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் மூவர்ண பலூன்களை பறக்க விட்டார். மேலும், 53 காவல்துறையினருக்கு முதலமைச்சர் பதக்கங்கள், பாராட்டு சான்றிதழ்கள், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பாக பணிபுரிந்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பொதுப்பணித்துறை, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்த்துறை மற்றும் போக்குவரத்துத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் சிறப்பாக பணியாற்றிய 400 அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், 85 காவல் துறையினர் என 485 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கி பாராட்டினார்.


அதனைத் தொடர்ந்து, ஈரோடு கிறிஸ்துஜோதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் பெருவங்கி இசை நிகழ்ச்சியும், அரசு இசைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மங்கள இசை நிகழ்ச்சி மற்றும் பரத நாட்டிய நிகழ்ச்சியும், ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெருந்துறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கல்கடம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி, ஈரோடு எஸ்.வி.என். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெருந்துறை கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு கிறிஸ்துஜோதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெருந்துறை விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் திண்டல் வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 10 பள்ளிகளை சார்ந்த மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுமார் 532 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்கு நினைவுப்பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கி பாராட்டினார்.


இவ்விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் , மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினிசந்திரா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மதுபாலன், உதவி ஆட்சியர் (பயிற்சி) பொன்மணி, மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் கணேஷ் (பொது), திரு.ஜெகதீசன் (வளர்ச்சி), திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கெட்சி லீமா அமலினி, இணை இயக்குநர் (வேளாண்மை) சின்னசாமி, முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஷ்குமார், ஈரோடு வட்டாட்சியர் பாலசுப்ரமணியம் உட்பட காவல் துறையினர், அரசு உயர் அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Jan 2023 6:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு