/* */

சாலையை தரமாக சீரமைக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

ழைக்காலங்களில் தற்போது போடப்பட்ட சாலை ஆனது கற்கள் பெயர்ந்த நிலையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்

HIGHLIGHTS

சாலையை தரமாக சீரமைக்க  சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
X

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளிலும் இதுபோன்ற தரமற்ற சாலை அமைக்கும் பணி தரமற்று இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் சாலையை மாநகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறை தரமான முறையில் சீரமைக்க வேண்டுமன சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை இரவு பகலாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்பட்டுகிறது.

இதன் காரணமாக விபத்துகளை ஏற்படுத்தும் சாலையாக உள்ளது. பல இடங்களில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர், நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகி அரசு மருத்துவமனை தேடி செல்லும் அவல நிலையும் காணப்படுகிறது. இன்று திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட சத்திரம் தெருவில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.

நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் ஜல்லி கற்கள் சிமெண்ட் போன்ற வண்ணத்தில் உள்ள தரமற்ற கிராவல் மண் கொண்டு சாலையிலே பரப்பி சாலை போடுவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாவது மட்டுமின்றி இனி வரும் மழைக்காலங்களில் தற்போது போடப்பட்ட சாலை ஆனது கற்கள் பெயர்ந்த நிலையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளிலும் இதுபோன்ற தரமற்ற சாலை அமைக்கும் பணி தரமற்று இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனை மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசு தலையிட்டு தரமான உப பொருட்களை கொண்டு சாலை அமைக்கும் பணியை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 11 Jan 2022 9:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  3. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  4. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  5. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  6. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  7. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  8. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  9. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!