/* */

நத்தம் பகுதியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகள்

Natham Area News திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் நடந்து முக்கிய செய்திகளைப் பற்றி பார்ப்போம்.

HIGHLIGHTS

நத்தம் பகுதியில் நடைபெற்ற   பல்வேறு நிகழ்ச்சிகள்
X

நத்தம் மீனாட்சி பள்ளி ஆண்டு விழா நடந்தது.

Natham Area News

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டி ஶ்ரீ மீனாட்சி மெட்ரிகுலேசன் பள்ளி ஆண்டு விழா சனிக்கிழமை நடந்தது. இதற்கு நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் ஜோசப் ஜெயபால் முன்னிலை வகித்தார். வந்திருந்த அனைவரையும் அறக்கட்டளை உறுப்பினர் ராஜ்குமார் வரவேற்றார். ஆண்டறிக்கையை பள்ளி முதல்வர் சத்யா வாசித்தார். சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழக வேதியியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப இணை பேராசிரியர் தேவராஜ் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து மாணவ - மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில் கலந்து கொண்ட மாணவ - மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பள்ளியின் அறக்கட்டளை உறுப்பினர்கள், ஆசிரிய - ஆசிரியைகள், மாணவ - மாணவிகள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மலையாளத்து கருப்பு கோவியில் திருவிழா - தீர்த்தம் எடுத்து வந்து காப்பு கட்டி விரதம் தொடங்கிய பக்தர்கள்

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காந்திநகர் மலையாளத்து கருப்பு மந்தையம்மன் கோயில் பிப்.14-ஆம் தேதி நடைபெறுகிறது.

நத்தம் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள மலையாளத்து கருப்பு மந்தையம்மன் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அழகர்கோவில் மலையிலிருந்து நூபுர கங்கை தீர்த்தம் எடுத்து வந்து நத்தம்சந்தன கருப்பு கோவிலில் இருந்து கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. நகரின் முக்கிய வீதிகளில் வழியாக கோயிலை சென்றடைந்து. அதைத்தொடர்ந்து, அபிஷேகம் நடைபெற்றது.பின்னர், பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினார்கள்.

Updated On: 5 Feb 2024 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  3. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  4. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  5. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  6. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  7. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  8. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  9. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு