/* */

கொரோனா தொற்று காரணமாகவே உள்ளூர் பாசஞ்சர் ரயில்கள் இயக்க படவில்லை

ரயில் நிலையங்களில் தேவையான வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது

HIGHLIGHTS

கொரோனா தொற்று  காரணமாகவே   உள்ளூர் பாசஞ்சர் ரயில்கள் இயக்க படவில்லை
X

 திண்டுக்கல்லில் ரயில்நிலையத்தை ஆய்வு செய்த தென்னக ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் ஆனந்த்

கொரோனா காலம் என்பதால் உள்ளூர் பாசஞ்சர் ரயில்கள் இயக்க படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவு பிறப்பித்தால் ரயில்களை இயக்கத் தயாராக இருக்கிறோம் என்றார் தென்னக ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் ஆனந்த்

தென்னக ரயில்வேயில் பொதுமேலாளர் வரும் நவம்பர் 26 ஆம் தேதி திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். முன்னேற்பாடாக மதுரை கோட்ட மேலாளர் ஆனந்த் மதுரை ரயில்வே கோட்டப் பகுதிக்கு உள்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார் .

அந்த வகையில் மதுரையில் இன்று தொடங்கிய ஆய்வு பணி, கூடல்நகர், சோழவந்தான் கொடைரோடு, அம்பாத்துரை ஆகிய பகுதிகளை ஆய்வு செய்தார், பின்னர் திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வருகை தந்து சிக்னல் பிரிவு, தண்டவாள பிரிவு, வர்த்தக பிரிவு, பாதுகாப்பு பிரிவு உள்ளிட்ட அனைத்து துறை பிரிவுகளிலும் ஆய்வை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து அய்யலூர் மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்து திருச்சியில் ஆய்வு செய்கிறார்.

திண்டுக்கல்லில் மேற்கொண்ட ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் தென்னக ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் ஆனந்த் கூறியதாவது: ரயில் நிலையங்களில் தேவையான வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது இது வழக்கமான சோதனை தான். கொரோனா காலம் என்பதால் உள்ளூர் பாசஞ்சர் ரயில்கள் இயக்க படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவு பிறப்பித்தால் ரயில்களை இயக்கத் தயாராக இருக்கிறோம். புதிய ரயில்களை பொருத்தவரை ஒவ்வொரு முறையும் அறிவிப்புக்கள் வெளியிடும் பொழுதும் எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.

Updated On: 21 Sep 2021 11:18 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  2. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  3. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  4. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  5. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  6. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  7. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  8. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  9. ஈரோடு
    அந்தியூரில் மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர்
  10. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு