/* */

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் பூ சந்தையில் மல்லிகை -முல்லை விலை உயர்வு

விலை ஏற்றத்தால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தாலும் போதிய விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் பூ சந்தையில் மல்லிகை -முல்லை விலை உயர்வு
X

திண்டுக்கல் மலர் சந்தையில் குவிந்துள்ள மல்லிகைப்பூக்கள்

அதிமான பனிப்பொழிவு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் மலர் சந்தையில் மல்லிகை பூ கிலோ 3000 ரூபாய்க்கு முல்லைப் பூ 2600 ரூபாக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது பேரறிஞர் அண்ணா பூ வணிக வளாகம். இங்கு ஆத்தூர், செம்பட்டி, ரெட்டியார்சத்திரம், தாடிக்கொம்பு, சாணார்பட்டி, ஏவெள்ளோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பூக்களை விற்பனை செய்வதற்காக இங்கு கொண்டு வருகின்றனர்.

தொடர் பனிப்பொழிவின் காரணமாக பூக்களின் வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. மல்லிகை பூ கிலோ 3000 ரூபாய்க்கும், கனகாம்பரம் 1,500 ரூபாய்க்கும், முல்லைப்பூ 2,600 ரூபாய்க்கும், காக்கரட்டான் 1400 ரூபாய்க்கும் ,சாதிப்பூ 1500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சம்மங்கி - 130பன்னீர் ரோஸ் - 200 செவ்வந்தி - 80 கோழிக்கொண்டை - 100விரிச்சிப் பூ - 200அரளிப் பூ - 350 செண்டுமல்லி - 80துளசி - 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.விலை ஏற்றத்தால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தாலும் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Updated On: 13 Jan 2022 11:09 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  2. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  3. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  4. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  5. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  6. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  7. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு
  9. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  10. வீடியோ
    Tamilaga Vettri Kazhaga-தின் மாநாட்டில் பங்கேற்ப்பேன் !#tvk #tvkvijay...