/* */

செப். 1-இல் பள்ளிகள் திறப்பு: சாக்பீஸ் தயாரிக்கும் பணிகள் தீவிரம்

திண்டுக்கல் தோட்டனூத்து இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் சாக்பீஸ் தயாரிப்பு பணி முழுவீச்சில் நடைபெறுகிறது

HIGHLIGHTS

செப். 1-இல் பள்ளிகள் திறப்பு:  சாக்பீஸ் தயாரிக்கும் பணிகள் தீவிரம்
X

திண்டுக்கல் மாவட்டத்தில் செப். 1 -இல் பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு சாக்பீஸ் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் அருகே உள்ள தோட்டனூத்து பஞ்சாயத்துக்கு உட்பட்ட இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாமில் சாக்பீஸ் தயாரிப்பை குடிசைத்தொழிலாக செய்து வருகின்றனர். ஒரு குடும்பத்திற்கு 10க்கும் மேற்பட்டோர் வரை இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், திண்டுக்கல், மதுரை, திருச்சி, சேலம் ,கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தேவையான சாக்பீஸ்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றனர்.சாக்பீஸ் உற்பத்தியில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நூற்றுக்கணக் கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு கிடைத்தது . மூன்று வகையான அட்டைப் பெட்டிகளில் 100, 120 ,140 என்ற எண்ணிக்கை கொண்ட சாக்பீஸ் பெட்டிகளை விற்பனைக்கு கொண்டு செல்கிறோம். இதன் விலை 15 முதல் 19 ரூபாய் வரை விற்கப்படுகிறது. 36 பாக்ஸ் அடங்கிய பெட்டியின் விலை 450 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.


தமிழ்நாட்டில் அரசு தரப்பில் எந்த விதமான உத்தரவாதமும் கிடையாது. தலைமை ஆசிரியர்களே நேரடி கொள்முதல் செய்வதால் முறையான, நிலையான ஆர்டர் கிடைப்பதில்லை. தற்போது, திண்டுக்கல் மாவட்டத்தில் தோட்டனூத்து இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாம், மேற்கு மரிய நாதபுரம், மேட்டூர், சிலுவத்தூர் ரோடு, மாவட்ட ஆட்சியர் வளாகம், மற்றும் கொட்டப்பட்டி ஆகிய ஊர்களில் சாக்பீஸ் தயாரிக்கும் தொழிலாளர்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாத காரணத்தினால் சாக்பீஸ் தொழில் முற்றிலும் நலிவடைந்திருந்தது. தற்போது வருகின்ற செப்டம்பர் 1 -ஆம் தேதி முதல் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால் திண்டுக்கல் தோட்டனூத்து இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாமில் சாக்பீஸ் தயாரிப்பு பணி மும்முரம் அடைந்துள்ளது.

Updated On: 29 Aug 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  2. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  3. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  4. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  5. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  7. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  8. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...