/* */

அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளை திமுக அரசு பழிவாங்குகிறது: மாநில நிர்வாகி புகார்

அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு விடுப்பு கொடுப்பது கிடையாது. அதிகாரிகளை திமுகவினர் மிரட்டி வருகின்றனர்

HIGHLIGHTS

அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளை திமுக அரசு பழிவாங்குகிறது: மாநில நிர்வாகி புகார்
X

திண்டுக்கல்லில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன்.

அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளை திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு திண்டுக்கல் மண்டல தேர்தல் ஆலோசனைக் கூட்டம், திண்டுக்கல் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் தலைமை வகித்தார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் முத்தையா வரவேற்றார்.

கூட்டத்தில், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் பேசுகையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆணைக்கிணங்க 36 ஆண்டுகளுக்குப் பின்னர்,போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் தேர்தல் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

தேர்தலை சுமூகமாக நடத்துவது குறித்து தொழிலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு உள்ளேன். தமிழகம் முழுவதும் கட்சித் தொண்டர்களிடையே மிகுந்த எழுச்சி ஏற்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறியது போல், இனி வரக்கூடிய அனைத்து தேர்தல்களிலும் அதிமுக மகத்தான வெற்றியைப் பெறும். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தொழிற்சங்கத்தினர் என்னென்ன கோரிக்கைகளை வைத்தார்களோ, அதனை அவருக்குப்பின்னர் முதல்வராகப் பதவி ஏற்ற எடப்பாடி கே. பழனிச்சாமி நிறைவேற்றியுள்ளார். நிலுவையில் உள்ள கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும்.அதிமுக ஆட்சியில் டீசல் விலை உயர்ந்தாலும் பேருந்து கட்டணத்தை உயர்த்தவில்லை.

மேலும், 3,000 புதிய பேருந்துகளை பொதுமக்களுக்காக அர்ப்பணித்தார்.ஆனால் தற்போதைய திமுக ஆட்சியில், பேருந்துகள் மிகுந்த சேதம் அடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், பேருந்து கட்டணத்தை உயர்த்தத் தயாராக உள்ளனர்.

திமுக அரசு, அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்களை பழிவாங்கும் போக்கை மேற்கொண்டு வருகிறது. ஆனால், அதிமுக ஆட்சியில் எந்த தொழிற்சங்கத்தினரையும் பழி வாங்கியது கிடையாது. மண்டலம் விட்டு மண்டலத்துக்கு, அண்ணா தொழிற்சங்கத்தினரை பணிஇடமாறுதல் செய்து வருகின்றனர். அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு விடுப்பு கொடுப்பது கிடையாது. அதிகாரிகளை திமுகவினர் மிரட்டி வருகின்றனர்.

தற்போது திமுக அரசு அகவிலைப்படி உயர்த்தப்படும் என கூறியிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஏனெனில், கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து அகவிலைப்படி வழங்கி இருக்க வேண்டும். ஆனால், அடுத்த வருடம் ஜனவரி மாதம் தான் அகவிலைப்படி வழங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.மேலும், நிலுவைத் தொகை வழங்கப்படாது எனவும் அறிவித்துள்ளது, தொழிலாளர்களின் வயிற்றில் அடிப்பது போன்ற செயலாகும். இதற்கு அண்ணா தொழிற்சங்க பேரவை கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது என்று பேசினார்.

நிகழ்ச்சியில் மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் தாடி மா.ராசு, பொருளாளர் அப்துல் ஹமீது, இணை செயலாளர் சூரியமூர்த்தி, தேனி மாவட்ட கழக செயலாளர் சையது கான், போக்குவரத்து பிரிவு மண்டல செயலாளர் நாராயணசாமி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பொருளாளர் உதயகுமார், முன்னாள் அரசு வழக்கறிஞர் பழனிச்சாமி,தேனி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பெரியகுளம் வெள்ளைச்சாமி, பாலமுருகன் உள்ளிட்ட கழக போக்குவரத்து தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Sep 2021 11:06 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  2. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  3. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  4. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  5. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  6. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  7. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  8. தென்காசி
    பெண்ணின் இருசக்கர வாகனத்தை திருடியதாக ஒருவர் கைது!
  9. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  10. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...