/* */

15 ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதைத்த நவதானிய காளியம்மன் சிலை பிரதிஷ்டை

15 ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதைத்த நவதானிய காளியம்மன் சிலை தோண்டி எடுத்து பிரதிஷ்டை செய்து மக்கள் வழிபாடு செய்தனர்.

HIGHLIGHTS

15 ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதைத்த நவதானிய காளியம்மன் சிலை பிரதிஷ்டை
X

15 ஆண்டுகளுக்குப் பிறகு காளியம்மனை தோண்டி எடுக்கப்பட்ட நிகழ்வு.

திண்டுக்கல் சோலைஹால் தியேட்டர் அருகே உள்ள மார்க்கெட் குமரன் தெருவில் உள்ள அருள்மிகு காளியம்மன் திருக்கோவிலில் நவதானியங்களால் செய்யப்பட்ட காளியம்மன் திருவுருவ சிலையை 15 ஆண்டுகளுக்கு முன்பு கருவறையில் புதைக்கப்பட்டது.

தற்போது நோய்த்தொற்றுகள் பெருகிவரும் நிலையில் அக்கோயிலுக்கு உட்பட்ட உப கோவில்களில் உள்ள பகுதிகளில் சிலரின் கனவுகளில் அம்மன் தோன்றியதாகவும், புதைக்கப்பட்ட இடத்திலிருந்து மீண்டும் பிரதிஷ்டை செய்து வைக்குமாறும் கனவில் கூறியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து, ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் அம்மனை புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டும் நிகழ்வானது நடைபெற்றது. இதில் 15 ஆண்டுகளுக்கு முன் நவ தானியங்களால் செய்யப்பட்ட காளியம்மன் சிலை எப்படி புதைக்கப்பட்டதோ அதே நிலையில் தற்போது பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் குலவையிட்டு அம்மனை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் அம்மனை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் பணிகளானது விரைவில் நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

15 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மனை தோண்டி எடுக்கப்பட்ட நிகழ்வானது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 6 Jan 2022 2:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  2. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  3. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  4. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  5. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  6. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  7. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  8. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  9. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  10. லைஃப்ஸ்டைல்
    50 அழகிய மேற்கோள்களுடன் ரமலான் வாழ்த்துக்கள்!