/* */

40 நிமிடத்தில் 60 வகை உணவுகள்- சிறுமி உலக சாதனை

நாற்பது நிமிடத்தில் 60 வகையான இயற்கை உணவுகளை தயாரித்து திண்டுக்கல்லைச் சேர்ந்த சிறுமி ஒருவர் இரு உலக சாதனைப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வடமதுரை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் புவனேஸ்வரி. இவரது மகளான தர்ஷினி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார் . சிறு வயதிலிருந்தே சமையலில் ஆர்வம் கொண்ட இவர் வீட்டில் தினமும் உணவு சமைக்கும் பழக்கம் உள்ளவர். இந்நிலையில் தொலைக்காட்சிகளில் வரும் சாதனை நிகழ்ச்சிகளை பார்த்து தானும் இதேபோல் உலக சாதனை படைக்க வேண்டும் என நினைத்த இவர் தனக்கு பிடித்த சமையல் துறையிலேயே சாதனை படைக்க முடிவெடுத்து பயிற்சிகள் மேற்கொண்டார்.

அதன்படி ஒரு மணி நேரத்தில் 54 வகையான இயற்கை உணவுகளை தயாரிக்கும் சாதனையை மேற்கொள்ள நினைத்து அதற்காக விண்ணப்பித்தார். ஏற்கனவே 21 வயதான நபர் ஒருவர் ஒரு மணி நேரத்தில் 108 உணவு வகைகளை ரசாயன பொருட்கள் மற்றும் செயற்கை உணவு வகைகளை பயன்படுத்தி தயாரித்ததே உலக சாதனையாக இருந்து வந்தது . இந்த நிலையில் இன்று பூத்தாம்பட்டியில் உள்ள தனது வீட்டில் யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ப்யூச்சர் கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிர்வாகிகள், ஊடகங்கள், பொதுமக்கள் முன்னிலையில் சிறுமி தர்ஷினி ஒரு மணிநேரத்தில் 54 வகையான இயற்கை உணவுகளை தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார்.

ஆனால் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பாகவே அதாவது 40 நிமிடத்தில் வெற்றிலை, துளசி, கம்பு, சோளம், தேன், பழவகைகளைக் கொண்டு சுமார் 60 வகையான இயற்கை உணவுகளை தயாரித்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார். இதையடுத்து யுனிவர்சல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ப்யூச்சர் கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை அமைப்பின் நிர்வாகிகள் சிறுமிக்கு உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினர்.

தொடர்ந்து பேசிய சிறுமி சிறுவயதிலிருந்தே சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததாகவும் தனக்குப் பிடித்தமான சமையல் துறையில் இளம் வயதிலேயே இந்த சாதனையை படைக்க தனக்கு உதவியாக இருந்த தனது தாய், தந்தை மற்றும் உறவினர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக கூறினார். பின்னர் பேசிய உலக சாதனை அமைப்பின் தலைவர் உலக அளவில் 40 நிமிடத்தில் 60 வகையான இயற்கை உணவுப் பொருட்களை செய்த சிறுமி தர்ஷினியின் பெயர் 2011ஆம் ஆண்டுக்கான உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறும் என்றார்.

Updated On: 1 Feb 2021 8:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.