/* */

உலக மக்கள் தொகை தின போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல் நிகழ்ச்சி

உலக மக்கள் தொகை தின போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் திவ்யதர்ஷினி பரிசு வழங்கினார்.

HIGHLIGHTS

உலக மக்கள் தொகை தின போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல் நிகழ்ச்சி
X

தர்மபுரி யில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டியில் பரிசு பெற்ற வடக்கு மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி பரிசுகளை வழங்கினார்.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி நடைபெற்ற கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, பாராட்டுச்சான்று மற்றும் கேடயம் மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்சினி வழங்கினார்.

உலக மக்கள் தொகை தினம் 2021 ஐ முன்னிட்டு 12.07.2021 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ரதம் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து விழிப்புணர்வு ரதத்தின் வாயிலாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி, தர்மபுரி, பென்னாகரம், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் ஆகிய வட்டாரங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வு இரண்டு பிரிவுகளாக 27.06.2021 முதல் 10.07.2021 வரை உலக மக்கள் தொகை விழிப்புணர்வு வாரமாகவும், 11.07.2021 முதல் 24.07.2021 வரை குடும்ப நல அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் வாரமாகவும் அனுசரிக்கப்பட்டது. மேலும் மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் தாக்கம் பற்றி கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப்போட்டி அரசு அவ்வையார் அரசு மேல் நிலைப்பள்ளி மற்றும் ஸ்ரீகிருஷ்ணா பாராமெடிகல் சயின்ஸ், தர்மபுரி மாணவ, மாணவியரிடையே நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, பாராட்டுச்சான்று மற்றும் கேடயம் மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்சினி வழங்கினார்.

இந்நிகழ்வில் துணை இயக்குநர் மரு.பி.முருகன், மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள், அருள், இளநிலை நிர்வாக அலுவலர், ராசன் பாபு, மாவட்ட புள்ளியியல் உதவியாளர் சம்பத் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Updated On: 9 Aug 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!