/* */

தருமபுரியில் மாணவ, மாணவியர்களின் மினி மாரத்தான் ஓட்டப் போட்டி

தருமபுரியில் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் மினி மாரத்தான் ஓட்டப் போட்டி நடைபெற்றது.

HIGHLIGHTS

தருமபுரியில் மாணவ, மாணவியர்களின் மினி மாரத்தான் ஓட்டப் போட்டி
X

தர்மபுரியில் மினி மாரத்தான் போட்டியை சார் ஆட்சியர் சித்ரா விஜயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 75-வது சுதந்திர தின விழா "சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவை" முன்னிட்டு மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை இணைந்து நடத்திய மினி மாரத்தான் ஓட்டப் போட்டியை தருமபுரி சார் ஆட்சியர் சித்ரா விஜயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய மினி மாரத்தான் ஓட்டப்போட்டி, தருமபுரி சாலை, செந்தில் நகர், இலக்கியம்பட்டி, பாரதிபுரம், அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நெசவாளர் காலனி சாலை வழியாக தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.

இந்த போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள், மாணவிகளுக்கு பரிசும், பாராட்டு சான்றும் வழங்கப்படவுள்ளது. தொடர்ந்து மினி மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட, அனைத்து மாணவர்களுக்கு, பிளாஸ்டிக்கை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, சுற்று சூழல் துறை சார்பில் தமிழ்நாடு அரசின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தில், மஞ்சப்பை வழங்கப்பட்டது. இந்த மினி மாரத்தான் போட்டியில் தருமபுரி விளையாட்டு விடுதி மாணவியர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் என 150-க்கும் மேற்பட்ட கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் டாக்டர் சாமுவேல் ராஜ்குமார், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் தே. சாந்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு. அண்ணாதுரை, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெ. முத்துக்குமார் உட்பட பள்ளி, கல்லூரி விளையாட்டு ஆசிரியர், ஆசிரியைகளும் கலந்து கொண்டனர்.

Updated On: 29 March 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்