/* */

தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு: ஆர்வத்துடன் மாணவர்கள் வருகை

ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தர்மபுரி மாவட்டத்தில் 334 பள்ளிகள் திறக்கப்பட்டு 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு.

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு: ஆர்வத்துடன் மாணவர்கள் வருகை
X

தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு ஆர்வத்துடன் மாணவர்கள் வருகை.

தர்மபுரி மாவட்டத்தில் ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு இன்று முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 1600 அரசு பள்ளிகளில் 8248 ஆசிரியர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கொரோனோ தொற்றை தடுக்கும் வகையில் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தர்மபுரி மாவட்டத்தில் 334 பள்ளிகள் திறக்கப்பட்டு இன்று 9 வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் நடைபெறுகிறது. பள்ளி வகுப்பறையில் பாதியளவு மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

தமிழக அரசின் வழி முறைகளை பின்பற்றி முகவசம் அணிந்து மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர் .பள்ளிக்கு வந்த மாணவர்களின் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, வரிசையாக வகுப்பறைக்குள் அனுப்பினர். முன்னதாக மாணவர்கள் காலை முதலே ஆர்வத்துடன் பள்ளிக்கு வர தொடங்கினார்கள். இதேபோன்று ஆசிரியர்களும் உற்சாகத்துடன் மாணவர்களை வரவேற்றனர். ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் ஆசிரியர்கள், மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வகுப்பறைக்கு 20 மாணவர்கள் வீதம் ஒவ்வொரு வகுப்பறையிலும் வகுப்புகள் நடைபெற்றன.

தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டி , அரூர், பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், நல்லம்பள்ளி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மாணவர்களுக்கு தொற்று பரவாமல் இருக்க கல்வித்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமிநாசினி தெளித்திருந்தனர்.


Updated On: 1 Sep 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!