/* */

10 கி.மீ. நடந்தே சென்று மலைகிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்த தருமபுரி எம்.எல்.ஏ.

சாலை குடிநீர் மின்சார வசதி இல்லாத மலை கிராமத்திற்கு, 10 கி.மீ. தூரம் நடந்து சென்று மக்களை சந்தித்து, தருமபுரி எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன், குறைகளை கேட்டறிந்தார்.

HIGHLIGHTS

10 கி.மீ. நடந்தே சென்று மலைகிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்த தருமபுரி எம்.எல்.ஏ.
X

சாலை, குடிநீர், மின்சார வசதி இல்லாத மலை கிராமத்திற்கு, பத்து கி.மீ. தூரம் நடந்து சென்று மக்களை சந்தித்த தருமபுரி எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன். 

தருமபுரி மாவட்டம் மிட்டாரெட்டிஅள்ளி அருகே, வனப்பகுதியில், மிட்டரெட்டிஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட மலை பகுதியில் ஒட்டன்கொள்ளை, கொஜமான் சட்டை, வாழைமரத்துகுட்டை, பையன் குட்டை, மல்லன் குட்டை உள்ளிட்ட 6 கிராமங்கள் உள்ளன. இங்கு, குடிநீர் .சாலை .மின்சார வசதி கோரி கிராம மக்கள் தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் இடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதையடுத்து, எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன், வனப்பகுதியில் உள்ள மலை கிராமத்திற்கு பத்து கி.மீ. தூரம் நடந்து சென்று மலை கிராமத்தை பார்வையிட்டார். இங்குள்ள பொதுமக்கள் மூன்று தலைமுறைகளாக விவசாயம் செய்து வாழ்ந்து வருவதாகவும் அடிப்படை வசதி இல்லாத்தால் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர். மலை பகுதியில்இருந்து வெளியேறி விட்டதாகவும் தெரிவித்தனர்.

தற்போது வசித்து வரும் மக்கள் விவசாயத்திற்கு டிராக்டர் கொண்டுவர வனப்பகுதியில் அனுமதி பெற்று தரவேண்டும் என்றும், சாலை, மின்சாரம், குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.

பின்னர், எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன் கூறுகையில், பொதுமக்கள் விவசாய பணிகள் மேற்கொள்ள டிராக்டர் மலைப் பகுதிக்கு கொண்டு செல்ல மாவட்ட வன அலுவலர் மற்றும் வனத் துறை அமைச்சரிடம் பேசி இப்பகுதி மக்கள் டிராக்டர் மூலம் உழவு பணி மேற்கொள்ள வழிவகை செய்யப்படும். அனைத்து வீடுகளுக்கும் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து சோலார் மின்விளக்கு குடிநீர் வசதிக்காக சோலார் மூலம் மின் மோட்டார் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

Updated On: 9 July 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  5. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  7. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  8. சேலம்
    மேட்டூர் அணை நீர்வரத்து 138 கன அடியாக அதிகரிப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!