/* */

தர்மபுரியில் பிஎஸ்என்எல் தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில், 4ஜி சேவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பிஎஸ்என்எல் தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தர்மபுரியில் பிஎஸ்என்எல் தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X

தர்மபுரியில்,  4ஜி சேவையை வலியுறுத்தி, பிஎஸ்என்எல் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரியில் 4ஜி சேவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அ.ராமசுந்தரம் தலைமை வகித்தார்.எஸ்என்இஏ சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.பாலமுரளி,ரேவதி,சங்கீதா முன்னிலை வகித்தார். எஸ்என்இஏ மாநில செயலாளர் கிஷோர்குமார்,என்எப்டிஇ மாவட்டச் செயலாளர் கே.மணி, டிஇபியூ மாவட்டச் செயலாளர் அம்மாசி, மாநில நிர்வாகி தங்கராஜ் ஆகியோர் உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு மே மாத ஊதியத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; மாதாமாதம் முறையாக ஊதியம் வழங்க வேண்டும்; வாடிக்கையாளர்களுக்கு 4 ஜி சேவையை தொடங்க வேண்டும். எப்டிடிஎச் இணைப்பு சேவை சரண்டவர் ஆவதை நிர்வாகம் தடுக்க வேண்டும்; 3-வது ஊதிய சம்பளக்குழு பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இறுதியில் நிர்வாகி பரிமளாபானு நன்றி கூறினார்.

Updated On: 25 Jun 2021 2:31 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  2. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  3. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  4. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  5. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  6. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  7. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  8. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  10. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...