/* */

மக்கள்தொகை தின விழிப்புணர்வு வாகனம்: கலெக்டர் கொடியசைத்து துவக்கினார்

தர்மபுரியில், மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு வாகனத்தை, கலெக்டர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

HIGHLIGHTS

மக்கள்தொகை தின விழிப்புணர்வு வாகனம்: கலெக்டர் கொடியசைத்து துவக்கினார்
X

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கலெக்டர் திவ்யதர்சினி தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

உலக மக்கள் தொகை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11-ம் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உலக மக்கள் தொகை தினத்தையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறும். அதன்படி, ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்பநலத்துறை சார்பில், உலக மக்கள் தொகை தினம் தருமபுரியில் கொண்டாடப்பட்டது.

கலெக்டர் அலுவலக வளாகத்தில், கலெக்டர் திவ்யதர்சினி, முன்னிலையில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு தின உறுதிமொழியை மருத்துவர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர். சுகாதாரத்துறையின் சார்பில் மக்கள் தொகை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கண்காட்சி வாகனத்தை கலெக்டர் திவ்யதர்சினி, கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.ஜெமினி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.அமுதவல்லி, இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) (பொறுப்பு) மரு.ரமேஷ், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள், குடும்ப நலத்துறை துணை இயக்குநர் மரு.முருகன், மருத்துவப்பணிகள் (தொழு நோய்) துணை இயக்குநர் மரு.புவனேஷ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 12 July 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...