/* */

தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது

HIGHLIGHTS

தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
X

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு வணிகவியல் பாடப் பிரிவில் படித்த மாணவ,மாணவிகள் சந்திக்கும் நிகழ்ச்சி தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது.

தருமபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கூடுதல் கட்டடத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பாக்கியலட்சுமி (பொறுப்பு) தலைமை வகித்தார். கடந்த 1989-1992 ம் ஆண்டில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் வணிகவியல் பாடப் பிரிவில் பயின்ற மாணவ,மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தாங்கள் கல்லூரியில் பயின்ற போது நடந்த சுவராசியமான நிகழ்வுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.மேலும் இவர்கள் தற்போது உள்ள சூழ்நிலைகள் குறித்தும் ஒருவருக்கொருவர் பேசி மகிழ்ச்சி அடைந்தனர்.இவர்களில் மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருகின்றனர்.ஒரு சிலர் தொழில் அதிபர்களாகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கல்லூரியில் பயின்ற திருப்பதி என்ற முன்னாள் மாணவர் தற்போது எக்சலன்ட் ஐ கேர் பிரைவேட் லிமிடெட் என்ற கம்பெனியை நிறுவி தொழில் முனைவோராக இருந்து பல பேருக்கு வேலை வழங்கி உள்ளார்.இவர் முன்னாள் முதல்வர் அன்பரசன்,பேராசிரியர் இளங்கோவன் ஆகியோருக்கு நினைவு பரிசுகளை வழங்கி கெளரவித்தார்.

தருமபுரி அரசு கலைக் கல்லூரியின் முதல்வர்(ஓய்வு) அன்பரசன்,பேராசிரியர்கள் (ஓய்வு) இளங்கோவன்,எஸ்.பிமுருகன் ஆகியோர் முன்னாள் மாணவர்களை வாழ்த்தி பேசினார்கள்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் பன்னீர்,தவமணி,பக்தவச்சலம்,சுரேஷ்,சரவணன்,முனிராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

Updated On: 4 May 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  2. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  3. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  4. ஈரோடு
    ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிக்னலில் நிழல் தரும் பந்தல்...
  5. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  6. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  7. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு
  8. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் : அமைச்சர்...
  9. லைஃப்ஸ்டைல்
    மனித உறவுகளின் சந்தோஷத்தை அழிக்கும் மிக மோசமான ஆயுதம் சந்தேகம்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஏமாற்றாதே ஏமாற்றாதே... ஏமாறாதே ஏமாறாதே..!