/* */

கடலூரில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.95.66 கோடி கடனுதவி

கடலூர் மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 95 கோடியே 66 லட்சத்திற்கான காசோலையினை அமைச்சர்கள் வழங்கினர்.

HIGHLIGHTS

கடலூரில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.95.66 கோடி கடனுதவி
X

கடலூரில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.95கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

அதேபோல கடலூர் மாவட்டத்தில் சுய உதவி குழுக்களுக்கு காசோலையும் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.

இதில் 25 ஊராட்சிகளில் 1180 சுய உதவி குழுக்களுக்கு ரூ. 95.66 கோடி வங்கி கடனுக்கான காசோலைகளை உழவர் மற்றும் வேளாண் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வே. கணேசன் ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர்கள் வேல்முருகன், சபா ராஜேந்திரன்,கோ. ஐயப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 14 Dec 2021 2:48 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  4. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  5. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  6. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  7. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  8. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்
  9. ஈரோடு
    ஈரோடு வந்த ரயிலில் கிடந்த 9.250 கிலோ கஞ்சா பறிமுதல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு 71 பேர் தேர்வு