/* */

கடலூர்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காவல் ஆய்வாளர் நிவாரண உதவி

கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதுநகர் காவல் நிலைய ஆய்வாளர் நிவாரண உதவி வழங்கினார்.

HIGHLIGHTS

கடலூர்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காவல் ஆய்வாளர் நிவாரண உதவி
X

கடலூரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உதய குமார் சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக கடலூர் மாவட்டமே வெள்ளக்காடாக மாறியது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம், மற்றும் தன்னார்வ அமைப்புகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர்.

கடலூர் முதுநகர் காவல் நிலைய ஆய்வாளர் உதயகுமார் தனது சொந்த செலவில் கடலூர் முதுநகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சங்கோலிகுப்பம் காலனி பகுதியில் உள்ள 250 குடும்பங்களுக்கு அரிசி வழங்க ஏற்பாடு செய்து இந்த அரிசியினை கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் கரிகால் பாரி சங்கர் மூலம் பஞ்சாயத்துத் தலைவரிடம் ஒப்படைத்தனர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காவல்துறை சார்பில் உதவி செய்ய வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் அறிவுறுத்திய நிலையில் முது நகர் காவல் நிலைய ஆய்வாளர் உதயகுமாரின் இந்த செயல் கடலூர் மாவட்ட காவல் துறையினர் அனைவராலும் பாராட்டைப் பெற்றுள்ளது.

Updated On: 2 Dec 2021 5:50 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  2. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  3. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  4. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  5. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  6. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்